தமிழகத்தில் விவசாயிகளின் துன்பத்துக்கு திமுகவும், காங்கிரஸும் தான் முக்கிய காரணம்: அமைச்சர் செல்லூர் ராஜூ குற்றச்சாட்டு

தமிழகத்தில் விவசாயிகளின் துன்பத்துக்கு திமுகவும், காங்கிரஸும் தான் முக்கிய காரணம்: அமைச்சர் செல்லூர் ராஜூ குற்றச்சாட்டு
Updated on
1 min read

சட்டப் பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாத விவரம்:

கே.ஆர்.ராமசாமி (காங்கிரஸ்):

அதிக எண்ணிக்கையில் உறுப்பி னர்களை கொண்டிருப்பதால் நீங்கள் ஆட்சி அமைத்துள்ளீர்கள். அதிமுக கூட்டணி 1.76 லட்சம் ஓட்டு களையும், திமுக கூட்டணி 1.75 லட் சம் ஓட்டுகளையும் பெற்றுள்ளது. அதிமுக 40.8 சதவீதம், திமுக கூட்டணி 39.7 சதவீதம் வாக்கு களைப் பெற்றுள்ளன. வித்தியாசம் 1.1 சதவீதம்தான்.

அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்:

ராமசாமி நன்றாகத்தான் பேசுகிறார். ஆனால், நாங்கள் அதிக வாக்கு சதவீதம் என்பதை பார்க்காதீர்கள். நாங்கள் பாஸ்; நீங்கள் பெயில்.

ராமசாமி:

நீங்கள் பாஸ் என்பதால் அங்கு இருக்கிறீர்கள். நாங்கள் பெயில் என்பதால் இங்கு இருக்கிறோம். வேலை கேட்டு 92 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர். அவர்களுக்கு என்ன செய்யப்போகிறீர்கள் என தெரியவில்லை. நாட்டில் முதன்மை மாநிலம் என எப்படி சொல்கிறீர்கள்.

நாட்டில் 56 சதவீதம் விவசாயி கள் உள்ளனர். ஆனால், உற்பத்தித் திறன் குறைவாக உள்ளது. விவசாயி களை உற்சாகப்படுத்தி, பல்வேறு வசதிகளை செய்து தரவேண்டும்.

அமைச்சர் செல்லூர் ராஜு:

விவசாயி களை இந்த அரசு ஊக்கப்படுத்தி வருகிறது. உர மானியத்தை ரத்து செய்தது காங்கிரஸும், திமுகவும்தான். இதனால், உர விலை உயர்ந்துவிட்டது. தமிழகத்தில் விவசாயிகள் யாரும் தற்கொலை செய்யவில்லை

அமைச்சர் ஆர்.காமராஜ்:

காங்கிரஸ் ஆட்சியில்தான் அரிசிக்கு சேவை வரி விதிக்கப்பட்டது.

அமைச்சர் பி.தங்கமணி:

தமிழகம் வாகன உற்பத்தி, ஜவுளி, தோல் உற்பத்தி, சுகாதாரத்துறை, திறன் மேம்பாடு உள்ளிட்ட துறைகளில் முதன்மை மாநிலமாக உள்ளது. 36 சிறப்பு பொருளாதார மண்டலங்கள் இங்கு உள்ளன. 4 சர்வதேச விமான நிலையங்கள் தமிழகத்தில் உள்ளன. ஜப்பான் நிறுவனங்கள் அதிகளவில் தமிழகத்தில் தொழிற்சாலைகளை நிறுவியுள்ளன. தொழில் துறையில் தமிழகம் அதிக வளர்ச்சி பெற்றுள்ளது.

ராமசாமி:

விவசாயிகள் பெற்ற கடன்களுக்காக ஜப்தி செய்வதாக கூறுகின்றனர்.

செல்லூர் ராஜூ:

தமிழகத்தில் விவசாயிகள் மீது கூட்டுறவு வங்கிகள் ஜப்தி நடவடிக்கை எடுப்பதில்லை. குறிப் பிட்டு கூறினால் சம்பந்தப்பட்ட வர்கள் மீது நடவடிக்கை எடுக்கப் படும்.

சக்கரபாணி (திமுக கொறடா):

தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் ஜப்தி செய்கின்றன. 50 எம்பிக்களை கொண்டுள்ள நீங்கள் மத்திய அரசை வலியுறுத்தி தேசியமயமாக்கப்பட்ட வங்கிக் கடன்களை ரத்து செய்ய வேண்டும்.

செல்லூர் கே.ராஜு:

இந்தியா முழுவதும் உர மானியம் ரத்து செய்யப்பட்டதால் பல ஆயிரம் பேர் செத்தனர். விவசாயிகளின் துன்பங்களுக்கு காங்கிரஸும், திமுகவும் தான் காரணம்.

இவ்வாறு விவாதம் நடந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in