வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்: 66 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் நாளை நடைபெறுகிறது

வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்: 66 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் நாளை நடைபெறுகிறது
Updated on
2 min read

வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பான சிறப்பு முகாம் தமிழகத்தில் உள்ள 65 ஆயிரத்து 961 வாக்குச்சாவடிகளிலும் நாளை (11-ம் தேதி) நடக்கிறது.

நாடு முழுவதும் தேர்தல் நடந் தாலும், நடக்காவிட்டாலும் ஆண்டு தோறும் செப்டம்பர் மாதம் வாக் காளர் பட்டியல் செம்மைப்படுத்தும் பணி நடக்கிறது. குறிப்பாக, அடுத்த ஆண்டு ஜனவரி 1-ம் தேதியை கணக்கிட்டு, அன்று 18 வயது நிறைவடைந்தவர்களின் பெயர் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டு வருகிறது. இதற் காக வழக்கமாக செப்டம்பர் 15-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு செம்மைப்படுத் தும் பணிகள் தொடங்கப்படும். இது தவிர, சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு திருத்தம், பெயர் சேர்த்தல், நீக்குதல் உள்ளிட்ட பணிகள் நடக்கும்.

இந்த ஆண்டு சற்று முன்னதாக செப்டம்பர் 1-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை வாக்காளர்கள் பெயர் சேர்த்தல், நீக்கல் உள்ளிட்ட வாக் காளர் பட்டியல் செம்மைப்படுத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இதையொட்டி கடந்த 1-ம் தேதி தமிழகம் முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திலும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இப்பட்டியலின்படி, தமிழகம் முழுவதும், 2 கோடியே 88 லட்சத்து 27 ஆயிரத்து 134 ஆண் வாக்காளர்கள், 2 கோடியே 93 லட்சத்து 9 ஆயிரத்து 222 பெண் வாக்காளர்கள், 4 ஆயிரத்து 598 மூன்றாம் பாலின வாக்காளர்கள் உட்பட 5 கோடியே 81 லட்சத்து 40 ஆயிரத்து 984 வாக்காளர்கள் தமிழகத்தில் உள்ளனர். கடந்த சட்டப்பேரவை பொதுத் தேர்தலின் போது 5.82 கோடிக்கு மேல் வாக்காளர்கள் இருந்த நிலையில் சுமார் 60 ஆயிரம் வாக்காளர்கள் குறைவாக உள்ளனர். இதற்கு காரணம், இடைப்பட்ட காலத் தில் இரட்டை பதிவுகள், இறந்தவர்களின் பெயர்கள் தொடர்ந்து நீக்கப்பட்டதுதான் என தேர்தல் துறையினர் தெரி வித்தனர்.

தொடர்ந்து, தற்போது நடக்கும் செம்மைப்படுத்தும் பணியிலும் இறந்தவர், இரட்டை பதிவுகள் உரிய பரிந்துரைகள் பெறப்பட்டு நீக்கப்படுகின்றன. கடந்த 9 நாட்களாக செம்மைப்படுத்தும் பணியில், வாக்குச் சாவடிகளில் வைக்கப்பட்டுள்ள வாக்காளர் பட்டியலை பொதுமக்கள் சென்று பார்த்து வருகின்றனர். இதையடுத்து, நாளை 11-ம் தேதி, தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம் நடக்கிறது.

இம்மானுவேல் சேகரன் நினைவு நாள் வருவதால் ராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டும் நாளை சிறப்பு முகாம் நடைபெறாது. அதற்கு பதிலாக வரும் 18-ம் தேதி சிறப்பு முகாம் நடை பெறும்.

இது தொடர்பாக தேர்தல் துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளிலும் உள்ள 65 ஆயிரத்து 961 வாக்குச்சாவடிகளில் இம்முகாம் நடக்கிறது. வரும் 2017 ஜனவரி 1-ம் தேதி 18 வயது நிறைவடைபவர்கள் இந்த முகாமில் பங்கேற்று தங்கள் பெயர்களை பட்டியலில் சேர்த்துக் கொள்ளலாம். அவர்களுக்கு தகுதி வயது ஜனவரியில் வந்த பின்னரே பட்டியல் வெளியிடப்படும். வழக்கத்தை விட 15 நாட்கள் முன்னதாக முகாம் நடத்தப்படுவதால், கால அவகாசம் கிடைக்கும். இதில், முழுமையாக இரட்டை பதிவுகள், இறந்தவர்களின் பெயர்களை நீக்க முடியும்’’ என்றார். தொடர்ந்து, 2-வது முகாம் இம்மாதம் 25-ம் தேதி நடக்கிறது.

கோவாவுக்கு செல்லும் தொழில்நுட்பம்!

தமிழக சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் தகவல் தொழில்நுட்ப அடிப்படையில் பல்வேறு புதுமைகளை தமிழக தேர்தல் துறை புகுத்தியது. வாகன அனுமதி, பிரச்சார அனுமதி உள்ளிட்ட அனுமதிகள் பெறுவது, கணக்கு சமர்ப்பிப்பது புகார்கள் மேலாண்மை உள்ளிட்டவை கணினி வாயிலாக செய்யப்பட்டன. தேர்தல் ஆணைய அனுமதியுடன் செயல்படுத்தப்பட்ட இவற்றை மற்ற மாநிலங்களிலும் பயன்படுத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் கோவா, பஞ்சாப், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் தேர்தல் நடக்க உள்ளது. இதையடுத்து, தமிழகத்தில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் தொடர்பாக முதலில் கோவா தேர்தல் துறைக்கு பயிற்சியளிக்க, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி செல்கிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in