

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம், ஆட்சியர் அ.சிவஞானம் தலைமையில் நேற்று நடைபெற்றது. அப்போது, விருதுநகர் மாவட்டம், அருப்புக் கோட்டை அருகே உள்ள பி.ஆண்டிபட்டியைச் சேர்ந்த மணிமாறன், எம்.ராணி உள்ளிட்ட 19 பேர் ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்.
அதில் கூறப்பட்டிருப்ப தாவது: மதுரை டி.வி.எஸ். நகர் சந்தானம் ரோடு பகுதி யில் உள்ள வீரமங்கை வேலு நாச்சியார் பேரவை மாநிலச் செயலாளரும், வழக்கறிஞரு மான அரண்மனை பாண்டியன் மற்றும் தனியார் நிறுவன உரிமையாளர் கலைச்செல்வி ஆகிய இருவரும், எங்களிடம் 3 ஆண்டுகளுக்கு முன் அறிமுகமாகினர். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் போர்டு உறுப்பினராக வேலை வாங்கித் தருவதாகக் கூறி, மணிமாறனிடம் ரூ.22 லட்சமும், அவரது மனைவி ராணிக்கு வணிகவரித் துறையில் எழுத்தர் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.3.70 லட்சமும், இதேபோன்று மற்ற நபர்களிடமும் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.2 லட்சம் முதல் ரூ.4.75 லட்சம் வரை மொத்தம் சுமார் ரூ.86 லட்சம் வசூலித்தனர்.
ஆனால், 3 ஆண்டுகளுக்கு மேலாகியும் இதுவரை வேலை வாங்கித் தரவில்லை. பணத்தைத் திருப்பிக் கேட்ட போது காசோலைகளை வழங்கி னர். ஆனால், வங்கியில் பணம் இன்றி காசோலை திருப்பி அனுப் பப்பட்டது. இது தொடர்பாக, உரிய நடவடிக்கை எடுத்து நாங் கள் கொடுத்த பணத்தை மீட்டுத் தர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.