நிலமோசடி வழக்கில் நேரில் ஆஜராகாவிட்டால் நடிகர்கள் வடிவேலு, சிங்கமுத்துக்கு வாரன்ட்: உயர் நீதிமன்றம் எச்சரிக்கை

நிலமோசடி வழக்கில் நேரில் ஆஜராகாவிட்டால் நடிகர்கள் வடிவேலு, சிங்கமுத்துக்கு வாரன்ட்: உயர் நீதிமன்றம் எச்சரிக்கை
Updated on
2 min read

நிலமோசடி தொடர்பான வழக் கில் நடிகர்கள் வடிவேலு, சிங்கமுத்து ஆகிய இரு வரும் ஏப்ரல் 20-ம் தேதி கண்டிப்பாக உயர் நீதி மன்றத்தில் ஆஜராக வேண் டும். இல்லையேல் வாரன்ட் பிறப்பிக்கப்படும் என நீதிபதி எச்சரித்துள்ளார்.

சென்னை இரும்புலியூரில் ராமச்சந்திரன் என்பவர் அட மானம் வைத்த 34 சென்ட் நிலத்தை தமிழ்நாடு தொழில் முதலீட்டு நிறுவனம் கடந்த 2006-ல் ஏலம் விட்டது. இந்த நிலத்தை அசோக் நகரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற வங்கி அதிகாரியான பழனியப்பன் ஏலம் எடுத்தார்.

இந்நிலையில் ராமச்சந்திரன் இறந்த பிறகு அவரது குடும்ப உறுப்பினர்கள் பெயரில் போலி ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு சர்ச்சைக்குரிய அந்த நிலம் பவர் ஏஜென்டான நடிகர் சிங்கமுத்து மூலமாக நடிகர் வடிவேலுவுக்கு விற்கப்பட்டது.

போலி ஆவணங்கள் மூலமாக தனது நிலத்தை அப கரித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும், நிலத்தை மீட்டு தரக்கோரியும் பழனி யப்பன் போலீஸில் புகார் கொடுத்தார்.

இறந்த ராமச்சந்திரனின் குடும்பத்தினர் மற்றும் நடிகர் கள் சிங்கமுத்து, வடிவேலு உள்ளிட்டவர்கள் மீது இந்தப் புகாரின்பேரில் வழக்குப் பதியப்பட்டது. இதைத் தொடர்ந்து நடந்த பேச்சுவார்த் தையில் ரூ.2 கோடியே 25 லட்சம் மதிப்புள்ள அந்த நிலத்தை நடிகர் வடிவேலு, பழனியப்பனிடமே திருப்பி ஒப்படைத்தார். இதனால் இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகார் வாபஸ் பெறப்பட்டது.

இந்த புகாரின் அடிப்படை யில் பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி ராமச் சந்திரனின் குடும்பத்தினர் உள்ளிட்ட 5 பேர் உயர் நீதி மன்றத்தில் மனுதாக்கல் செய்தி ருந்தனர். இந்த வழக்கு விசாரணை நீதிபதி எம்.வி.முரளிதரன் முன்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த வழக்கில் நடிகர்கள் வடி வேலுவும், சிங்கமுத்துவும் சமரசமாக செல்வதாக கூறிய தன் அடிப்படையில் அவர்கள் இருவரும் ஏப்ரல் 7-ம் தேதி (நேற்று) உயர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக ஏற்கெனவே உத்தரவிடப்பட்டு இருந்தது. ஆனால் அவர்கள் ஆஜராக வில்லை.

இதையடுத்து நீதிபதி எம்.வி.முரளிதரன் தனது உத்தரவில், ‘‘நடிகர்கள் வடி வேலு, சிங்கமுத்து இருவரும் இன்றைய (நேற்று) விசார ணைக்கு நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டும், அவர்கள் ஆஜராகவில்லை. சினிமா படப் பிடிப்பு காரணமாக அவர்கள் ஆஜராகவில்லை என கூறப் பட்டது. ஆனால், இதை ஒரு காரணமாக ஏற்றுக்கொள்ள முடியாது. நடிகர்கள் வடிவேலு, சிங்கமுத்து ஆகிய இருவரும் வேண்டுமென்றே உயர் நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் நேரில் ஆஜராக வில்லை என்றே கருதத் தோன்றுகிறது. உயர் நீதிமன் றம் ஒன்றும் அவர்களுக்கு உள்ள பிரச்சினையை பேசி தீர்த்துக்கொள்ளுங்கள் என்றோ, சமரசமாக செல்லுங் கள் என்றோ உத்தரவிடவோ அல்லது வேண்டுகோள் விடுக் கவோ உகந்த இடம் இல்லை. வழக்கின் தகுதியின் அடிப்படை யில் மட்டுமே உத்தரவுகளை பிறப்பிக்க முடியும்.

எனவே இந்த வழக்கில் வரும் ஏப்ரல் 20-ம் தேதி மதியம் 2.15 மணிக்கு நடிகர்கள் வடிவேலு, சிங்கமுத்து ஆகிய இருவரும் உயர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும். அன்று ஆஜராகத் தவறினால் அவர்களுக்கு வாரன்ட் பிறப் பித்து இருவரையும் பிடித்து வந்து ஆஜர்படுத்தவும் இந்த நீதிமன்றம் தயங்காது என எச்சரிக்கிறேன். அதேசமயம், அன்றைய தினம் இருவரும் தவறாமல் நேரில் ஆஜரா வார்கள் என அவர்கள் தரப்பு வழக்கறிஞர்களும் உத்தர வாதம் அளித்துள்ளனர்” என குறிப்பிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in