Published : 18 Sep 2016 09:38 AM
Last Updated : 18 Sep 2016 09:38 AM

ஐஏஎஸ் முதன்மைத் தேர்வுக்கு உதவித்தொகையுடன் இலவச பயிற்சி: தமிழக அரசு அறிவிப்பு

ஐஏஎஸ் முதன்மைத் தேர்வுக்கு உதவித்தொகையுடன் இலவச பயிற்சி பெற விருப்பம் உள்ள வர்கள் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

சிவில் சர்வீசஸ் போட்டித் தேர் வின், முதல்நிலைத் தேர்வு முடிவு நேற்று முன்தினம் யுபிஎஸ்சி இணையதளத்தில் வெளியிட்டது. அதன்படி, 15 ஆயிரத்து 445 பேர் முதல் நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கப்பட் டுள்ளனர். அவர்கள் அடுத்த கட்ட தேர்வான முதன்மை (மெயின்) தேர்வு எழுத அனுமதிக் கப்படுவார்கள். முதன்மைத் தேர்வு டிசம்பர் 3-ம் தேதி தொடங்குகிறது. தமிழ்நாட்டில் சென்னையில் மட்டும் முதன்மைத் தேர்வு நடத்தப்படுகிறது.

இந்நிலையில், தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: 2016-ம் ஆண்டுக்கான மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணைய (யுபிஎஸ்சி) முதன்மைத் தேர்வு பயிற்சிக்கு மாணவ, மாணவியர் சேர்க்கைக்கான விண்ணப்பப் படிவம் ‘அகில இந்திய குடிமைப் பணித் தேர்வு பயிற்சி மையம், காஞ்சி கட்டிடம், பி.எஸ்.குமார சாமி ராஜா சாலை, ராஜா அண்ணா மலைபுரம் சென்னை-28’ என்ற முகவரியில் வழங்கப்படும். பின்னர், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களைப் பெற்று சேர்க்கை நடைபெறும்.

முதன்மைத் தேர்வுக்கான பயிற்சிக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த மொத்தம் 225 பேர் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். அதில், எஸ்.சி- 92, எஸ்.சி (அருந்ததி யர்)-18, எஸ்.டி-3, மிகவும் பிற்படுத்தப்பட்டோர்- 40, பிற்படுத் தப்பட்டோர்- 54, பிற்படுத்தப் பட்டோர் (முஸ்லிம்)-7, மாற்றுத் திறனாளி- 7, இதர வகுப்பினர்- 4 பேர் என்ற அடிப்படையில் மாணவர் சேர்க்கை இருக்கும்.

இதர பயிற்சி மையத்தில் பயின்ற மாணவர்களும், எந்த பயிற்சி மையத்திலும் சேராமல் தனியே முதல்நிலைத் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்களும் முதன்மைத் தேர்வுக்கான பயிற்சி யில் சேர்த்துக் கொள்ளப்படு வார்கள். மாணவர் சேர்க்கை முடிந்தவுடன் தொடங்கும் பயிற்சி வகுப்புகள், முதன்மைத் தேர்வு கள் தொடங்கும் வரை நடை பெறும். பயிற்சிக் காலத்தில் கட் டணமில்லா விடுதி வசதி உண்டு. மேலும், பயிற்சிக் காலத்தில் மாதம் ஒன்றுக்கு ரூ.3,000 வீதம் தமிழக அரசால் அனைத்து மாண வர்களுக்கும் உதவித்தொகை வழங்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு, www.civilservicecoaching.com என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x