

சின்னமலையில் இருந்து விமான நிலையம் வரை மெட்ரோ ரயில் சேவை தொடங்க ரயில்வே பாது காப்பு ஆணையரகம் நேற்று ஒப்புதல் அளித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசின் தலைமை செயலாளருக்கு உடனடி யாக தகவல் அளிக்கப்பட்டுள்ள தால், மெட்ரோ ரயில் சேவை தொடக்க விழாவுக்கான தேதி விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னையில் 2 வழித்தடங் களில் மொத்தம் 45 கி.மீ. தூரத் துக்கு மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில், இரண்டாவது வழித்தடத்தில் ஆலந்தூரில் இருந்து கோயம் பேட்டுக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதற் கிடையே, சின்னமலை - ஆலந்தூர் பரங்கிமலை விமான நிலையம் இடையே மெட்ரோ ரயில் இயக்குவதற்கான சோதனை ஓட்டம் நடந்து வருகிறது.
கடந்த 27-ம் தேதி சென்னைக்கு வந்த ரயில்வே பாதுகாப்பு ஆணையர் எஸ்.நாயக் தலைமையிலான குழுவினர் சின்னமலையில் இருந்து விமானம் நிலையம் வரை மொத்தம் 9 கி.மீ தூரத்துக்கு, இன்ஜின் மற்றும் பாதையை ஆய்வு செய்யும் ரயில் டிராலி மூலம் ஆய்வு நடத்தினர். விமான நிலையம், மீனம்பாக்கம், நங்கநல்லூர் ரோடு, ஆலந்தூர், கிண்டி, சின்னமலை ஆகிய இடங்களில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களிலும் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்நிலையில், சின்னமலை விமான நிலையம் இடையே மெட்ரோ ரயில் சேவை தொடங்கு வதற்கான ஒப்புதலை ரயில்வே பாதுகாப்பு ஆணையரகம் நேற்று அளித்துள்ளது. இதற்கான கடிதமும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு நேற்று அனுப்பப் பட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது, ‘‘சென்னையில் சின் னமலை - ஆலந்தூர் பரங்கிமலை விமான நிலையம் (11 கி.மீ) இடையே உயர்மட்ட பாதையில் மெட்ரோ ரயில்களை இயக்க கடந்த சில மாதங்களாக சோதனை ஓட்டம் நடந்து வருகிறது. கடந்த 27-ம் தேதி வந்திருந்த ரயில்வே பாதுகாப்பு ஆணையரக அதிகாரிகள் சின்ன மலையில் இருந்து விமான நிலையம் வரையில் முழுமையாக ஆய்வு செய்தனர்.
இதற்கிடையே, சின்னமலை விமான நிலையம் வரையில் மெட்ரோ ரயில்சேவை தொடங்க ஒப்புதலை அளித்துள்ளது. இதற்கான அறிவிப்பை நேற்று எங்களுக்கு தெரிவித்துள்ளது. இதையடுத்து, இந்த தகவலை தமிழக அரசின் தலைமை செயலாளருக்கு உடனடி யாக தெரிவித்துள்ளோம். மேலும், இந்த தடத்தில் மெட்ரோ ரயில் சேவை தொடங்குவதற்கான தேதியை தமிழக அரசு விரைவில் அறிவிக் கும். இம்மாத இறுதிக்குள் மக்களின் பயன்பாட்டுக்கு வரும் என நம்புகிறோம்’’ என்றார்.
சின்னமலை விமானநிலை யம், ஆலந்தூர் பரங்கிமலை இடையே மெட்ரோ ரயில் திட்ட வரைபடங்கள், கட்டுமானப் பணிகளின் முறைகள், சிக்னல்கள் செயல்பாடு, ரயில் பாதையின் திறன், ரயில் நிலையங்களில் பாது காப்பு அம்சங்கள், சோதனை ஓட்டத்தின் செயல்பாடுகள் உள்ளிட் டவை தொடர்பாக முழுமையாக விளக்கும் வகையில் 10 ஆயிரம் பக்கங்கள் கொண்ட பாதுகாப்பு அறிக்கை ரயில்வே பாதுகாப்பு ஆணையரகத்திடம் கடந்த மாதம் அளிக்கப்பட்டது. அந்த அறிக்கை யில் உள்ள சிறப்பு அம்சங்களையும் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு செய்து திருப்தியாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
ஆலந்தூர் பரங்கிமலை இடையே உள்ள வழித்தடத்தில் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் இந்த மாத இறுதியில் ஆய்வு நடத்த உள்ளதாக மெட்ரோ ரயில்வே அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.