எஸ்பிஐ நிர்வாகம் ஒப்பந்தத்தை மீறுவதாக குற்றச்சாட்டு: வங்கி ஊழியர்கள் 8-ம் தேதி வேலை நிறுத்த போராட்டம்

எஸ்பிஐ நிர்வாகம் ஒப்பந்தத்தை மீறுவதாக குற்றச்சாட்டு: வங்கி ஊழியர்கள் 8-ம் தேதி வேலை நிறுத்த போராட்டம்
Updated on
1 min read

ஒப்பந்தத்தை மீறி செயல்படும் பாரத ஸ்டேட் வங்கி நிர்வாகத்தைக் கண்டித்து வரும் 8-ம் தேதி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் செய்யப்படும் என அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து, அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் சி.எச்.வெங்க டாச்சலம் ‘தி இந்து’விடம் கூறிய தாவது:

ஊதிய உயர்வு, ஊழியர்களின் பணி வரன்முறை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து, இந்திய வங்கிகள் சம்மேளனம் மற்றும் இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் இடையே கடந்த ஆண்டு மே மாதம் ஒப்பந்தம் கையெழுத்தானது.

ஆனால், இந்த ஒப்பந்தத்தை மீறும் வகையில் பாரத ஸ்டேட் வங்கி நிர்வாகம் செயல்பட்டு வருகிறது. தனது 5 துணை வங்கிகளிலும் அவ்வாறே செய்ய முயற்சி செய்கிறது.

டெல்லியில் உள்ள துணை தலைமை தொழிலாளர் ஆணையர் தலையிட்டு இப்பிரச்சினைக்கு தீர்வு காண முற்பட்டார். எனினும், வங்கி நிர்வாகம் தொடர்ந்து பிடிவாதப் போக்குடன் செயல்பட்டு வருகிறது. எனவே, இதைக் கண் டித்து வரும் 8-ம் தேதி ஒருநாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வேலை நிறுத்தத்தில் பொதுத் துறை, பழைய தலை முறை தனியார் வங்கிகள் மற்றும் வெளிநாட்டு வங்கி ஊழியர்கள் பங்கேற்பார்கள். இவ்வாறு வெங்கடாச்சலம் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in