Published : 01 May 2017 08:55 AM
Last Updated : 01 May 2017 08:55 AM

ரியல் எஸ்டேட் ஒழுங்குபடுத்தல் சட்டம் இன்றுமுதல் அமலுக்கு வருகிறது: வீடுகள் விலை உயரும் என கருத்து

மத்திய அரசு இயற்றியுள்ள ரியல் எஸ்டேட் ஒழுங்குபடுத்தல் சட்டம் இன்றுமுதல் அமலுக்கு வருகிறது.

ரியல் எஸ்டேட் தொழிலை கட்டுப்படுத்தவும் ஒழுங்குமுறைக் குள் கொண்டுவரவும் ரியல் எஸ்டேட் ஒழுங்குபடுத்தல் சட்டம் 2016-ஐ கடந்த ஆண்டு மத்திய அரசு நிறைவேற்றியது. அதன்படி சட்டத்தில் சில விதிமுறைகளை மத்திய அரசு வகுத்திருந்தது. அதில் குறிப்பிட்ட சில விதிகள் கடந்த ஆண்டு அமலுக்கு வந்தன.

மீதமுள்ள விதிமுறைகள் 2017-ம் ஆண்டு மே 1-ம் தேதி அமலுக்கு வரும் என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது. அதுதவிர, அந்தந்த மாநில அரசுகள் இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்தும் வகையில் விதிகளை உருவாக்கி அறிவிக்க வேண்டும் என்றும் மத்திய கேட்டுக் கொண்டது. தமிழக அரசு, விதிகளை ஜனவரி மாதம் இறுதி செய்து அறிவித்தது.

இந்த நிலையில் சட்டம் அமலுக்கு வரவுள்ளது. இந்த சட்டத்தின்படி முறைகேடான கட்டு மானங்கள் நடைபெறுவதையும், ரியல் எஸ்டேட் தொழிலில் உள்ள மோசடிகளும் குறைக்கப்படும் என்று கருதப்படுகிறது. மேலும் குறிப்பிட்ட தேதிக்குள் கட்டுமான நிறுவனங்கள் வீட்டை கட்டி வாடிக்கையாளரிடம் தரவில்லையென்றால் தண்டனை வழங்கும் ஷரத்துகளும் சட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. மேலும் 45 நாட்களுக்குள் பணத்தை வாடிக்கையாளர்களுக்கு திருப் பிக் கொடுக்க வேண்டும். கட்டுமானப் பணிகள் முடிவதற்கு முன்பே கட்டிடத்தின் அசல் மாதிரி என்பது போன்ற படங்களை போட்டு விளம்பரம் செய்ய முடியாது. இதுதவிர ரியல் எஸ்டேட் தொழிலை கட்டுப்படுத்த தீர்ப்பாயம் அமைக்கப்பட்டு, அதில் வாடிக்கையாளர்கள் தங்களது புகார்களைத் தெரிவிக்கும் வகையிலும் ஷரத்துகள் சட்டத்தில் இடம்பெற்றுள்ளன.

அதேவேளையில் சட்டம் அமலுக்கு வருவதால் வீடுகளின் விலை சிறிது உயரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து இந்திய ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் கூட்டமைப்பு (கிரடாய்) தமிழ்நாடு பிரிவை சேர்ந்த கட்டுமான நிறுவனத்தினர் கூறியதாவது:

‘ரெரா’ சட்டம் எனப்படும் இந்த சட்டம் அமலுக்கு வந்தால், ரியல் எஸ்டேட் தொழில் ஒரு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப் படும். மேலும் தொழிலில் வெளிப் படைத் தன்மை உண்டாகும். இதனால் ரியல் எஸ்டேட் தொழில் மீதும் கட்டுமான நிறுவனங்கள் மீதும் வாடிக்கையாளர்களுக்கு நம்பிக்கை உருவாகும். குறிப் பிட்ட காலத்தில் பணிகளை முடிக்க வேண்டும் என்பதால், அரசுத்துறை அனுமதிகளும் உடனுக்குடன் கிடைத்துவிடும்.

ஏற்கெனவே ஒழுங்குப்படுத்தப் பட்ட முறையில் இயங்கிவரும் நிறுவனங்களுக்கு சட்டத்தால் பாதிப்பு ஏற்படாது. ஒழுங்குப்படுத் தாத நிறுவனங்களுக்கு மட்டுமே பாதிப்பு. மேலும் அனைத்து கட்டுமான நிறுவனங்களும் முறை யான அனுமதி, உரிமம் போன்ற அனைத்து ஆவணங்களையும் பெற்றே ஆக வேண்டும். இதற் காக அரசுக்கு பல வகைகளில் கட்டணங்கள் செலுத்த வேண்டி யிருக்கும். இதன் காரணமாக வீடுகளின் விலையில் சிறிது ஏற்றம் இருக்கும். அதே வேளையில் நம்பகத்தன்மையும் வெளிப்படைத் தன்மையும் அதிகரிக்கும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x