ஜனவரி 22-ம் தேதி யுஜிசி நெட் தேர்வு: சிபிஎஸ்இ அறிவிப்பு

ஜனவரி 22-ம் தேதி யுஜிசி நெட் தேர்வு: சிபிஎஸ்இ அறிவிப்பு
Updated on
1 min read

கலைப்பிரிவு பாடங்களில் உதவி பேராசிரியர் பணிக்கான நெட் தகுதித்தேர்வை பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) சார்பில் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) ஆண்டுக்கு 2 தடவை நடத்துகிறது.

கடந்த ஆகஸ்ட் மாதம் நெட் தேர்வு நடத் தப்பட்ட நிலையில், அடுத்த நெட் தேர்வு வரும் ஜனவரி மாதம் 22-ம் தேதி நடத்தப்பட உள்ளது. கலைப் பிரிவு பாடங்களில் (வரலாறு, புவியியல், சமூகவியல், உளவி யல், பொருளாதாரம், வணிகவியல், அரசியல் அறிவியல், மொழிப் பாடங்கள் போன்றவை) முதுகலை பட்டம் பெற்றவர்கள் இதற்கு விண் ணப்பிக்க தகுதியுடைவர் ஆவர். இறுதி ஆண்டு படிப்பவர்களும் விண்ணப்பிக்கலாம்.

யுஜிசி நெட் தேர்வு தொடர்பான முழு விவரங்கள் அடங்கிய அறிவிப்பு அக்டோபர் மாதம் 15-ம் தேதி இணையதளத்தில் (www.cbsenet.nic.in) வெளியிடப்படும் என்று சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in