Published : 06 Jun 2017 08:25 AM
Last Updated : 06 Jun 2017 08:25 AM

வீட்டை விற்க முயன்றதால் நண்பர் ஆத்திரம்: ஓபிஎஸ் ஆதரவாளர் கொலை; 3 மணி நேரத்தில் குற்றவாளிகள் கைது

எம்ஜிஆர் நகர், சூளைப்பள்ளம் அண்ணா தெருவைச் சேர்ந்தவர் குமார் என்ற சின்ன குமார் (40). அதிமுக நிர்வாகியான இவர், ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளராக இருந்துள்ளார். ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வந்துள் ளார்.

நேற்று முன்தினம் இரவு 10.15 மணிக்கு இவர் வெளியே சென்று விட்டு வீட்டருகே வரும்போது அங் குள்ள மறைவான இடத்தில் பதுங்கி இருந்த 5 பேர் கும்பல் கண் இமைக்கும் நேரத்தில் குமாரை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியது. அவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டனர்.

உடனடியாக எம்ஜிஆர் நகர் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து சென்ற போலீஸார் குமாரை மீட்டு வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி குமார் உயிர் இழந்தார்.

சென்னை காவல் ஆணையர் ஏ.கே விஸ்வநாதன் மேற்பார்வையில், தியாகராய நகர் துணை ஆணையர் சரவணன் தலைமையில் எம்ஜிஆர் நகர் போலீஸார் வழக்கு பதிந்தனர். கொலை தொடர்பாக சீனிவாசன் (41), ஆலாறு என்ற மணி (21), பாலமுருகன் (22), கமலக் கண்ணன் (20), பிரபாக ரன் (21) ஆகிய 5 பேரை கைது செய்துள் ளனர். அனைவரும் கூடுவாஞ்சேரியை சேர்ந்தவர்கள். கொலையாளிகளை 3 மணி நேரத்தில் கைது செய்த தனிப் படை போலீஸாரை காவல் ஆணையர் ஏ.கே விஸ்வநாதன் பாராட்டினார்.

கொலைக்கான காரணம் குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:

கைது செய்யப்பட்டுள்ள சீனிவாசன் சரித்திர பதிவேடு குற்றவாளி. இவரும் கொலை செய்யப்பட்ட குமாரும் சிறு வயதில் இருந்தே நண்பர்கள். குமாரின் வீட்டருகே வசித்து வந்த நாகசத்யா என்ற பெண்மணி, சீனிவாசனை குழந்தை பருவத்தில் தத்தெடுத்து வளர்த்து வந்தார். சில வருடங்கள் முன்னர் சீனிவாசனின் நடவடிக்கை சரியில்லாதால், அவரை நாகசத்யா வீட்டைவிட்டு வெளியேற்றினர். அதன் பிறகு சீனிவாசன் கூடுவாஞ்சேரியில் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில், எம்.ஜி.ஆர்.நகரில் நாகசத்யா தான் வசிக்கும் வீட்டை குமார் மூலம் விற்க முயற்சித்துள்ளார். இதையறிந்த சீனிவாசன், நாகசத்யாவி டம், ‘நான் உங்கள் வளர்ப்புப் பிள்ளை என்பதால் மேற்படி வீடு எனக்குதான் சொந்தம்’ என சண்டை போட்டதுடன், குமாரிடம் வீட்டை விற்க வேண்டாமென பலமுறை கூறியுள்ளார்.

ஆனால், குமார் அவரது பேச்சை கேட்காமல் வீட்டை விற்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளார். இதனால், ஆத்திரம் அடைந்த சீனிவாசன் தனது நண்பர்கள் உதவியுடன் குமாரை கொலை செய்துள்ளார் என்றனர்.

கொலை செய்யப்பட்டுள்ள குமார், காஞ்சி வரதாஜபெருமாள் கோயில் மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கில் போலி குற்றவாளியாக சரண்டர் ஆனவர் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x