

சென்னை போக்குவரத்துக் காவல்துறை ஆட்டோக்களைப் பற்றிய புகார்களை பதிவு செய்ய இரண்டு புது தொலைப்பேசி எண்களை வெளியிட்டுள்ளது.
9003130103 மற்றும் 7418503430, இந்த இரண்டு அவசர உதவி எண்களில் எதாவது ஒன்றை அழைத்தோ அல்லது எஸ்.எம்.எஸ் அனுப்பியோ, மீட்டர் போட மறுக்கும் ஆட்டோக்காரர்கள், அதிகமாக கட்டணம் கேட்பவர்கள் பற்றிய புகார்களை பதிவு செய்யலாம். அந்த வாகனங்கள் உடனடியாக கண்டுபிடிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என மூத்த போக்குவரத்து காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
ஆகஸ்டு மாதம் புதிய ஆட்டோ கட்டணங்களை தமிழக அரசு நிர்ணையித்தது. முதல் 1.8 கிலோமீட்டருக்கு 25 ரூபாயும், அதற்கு பிறகு ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் 12 ரூபாயும் வசூலிக்க வேண்டும். மீட்டர்கள் பொருத்துவதற்கான காலக்கெடு சென்ற மாதமே முடிவடைந்துவிட்டது. இன்னும் ஆட்டோக்கள் விதிகளை பின்பற்றாததால், பொது மக்களுக்கு எங்கு சென்று புகார் அளிப்பது என்பதைப் பற்றிய சந்தேகங்கள் இருந்தன. புது தொலைப்பேசி எண்களின் மூலம், புகார் பதிவு முறையை சென்னை போக்குவரத்து காவல்துறை எளிமையாக்கியிருக்கிறது.