

ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது வன்முறையில் ஈடுபட்ட போலீஸார் மீது என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறீர்கள் என்பது உள்ளிட்ட 3 கேள்விகளுக்கு 2 வாரத்தில் பதிலளிக்க அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது ஏற்பட்ட கலவரம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி மூத்த வழக்கறிஞர் ஆர்.காந்தி மற்றும் பி.குமார் ஆகியோரது சார்பில் உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த மனுக்கள், நீதிபதி ஆர்.மகாதேவன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தன. அப்போது மனுதாரர் பி.குமார் சார்பில் ஆஜரான வழக்கறி ஞர் கே.பாலு, ‘‘ஜல்லிக்கட்டு கல வரத்துக்கு காரணமே போலீஸார் தான். வன்முறையைத் தூண்டிவிட் டதும் அவர்கள்தான். குடிசையை எரித்ததும், ஆட்டோவைக் கொளுத் தியதும், வாகனங்களை அடித்து நொறுக்கியதும் போலீஸார்தான் என்பதற்கு போதுமான வீடியோ ஆதாரங்கள் உள்ளன’’ என்றார்.
உடனே, நீதிபதி, ‘‘உங்களது மனுதாரருக்கும், இந்தப் போராட்டத் திற்கும் என்ன தொடர்பு? அவர் போலீ ஸாரால் பாதிக்கப்பட்டுள்ளாரா?’’ என கேள்வி எழுப்பினார்.
அதற்கு வழக்கறிஞர் கே.பாலு, ‘‘போலீஸார்தான் இந்த வன் முறைக்கு காரணம் என்பதற்கும், அப்பாவி பொதுமக்களை வீடு புகுந்து போலீஸார் அடித்து இழுத்து வந்ததற்கும் வீடியோ ஆதாரங்கள் எங்களிடம் உள்ளது. ஆனால், போராட்டத்தில் ஈடுபட்ட வர்கள் மீது போலீ்ஸார் நடத்திய தடியடியை மாநகர காவல் ஆணை யர் நியாயப்படுத்துகிறார். வன் முறையில் போலீஸார் ஈடுபடுவது போன்ற வீடியோ காட்சிகள் மார் பி்ங் செய்யப்பட்டவை என்றும், சமூக விரோதிகள் போலீஸ் சீருடை யில் உள்ளே புகுந்து வன்முறையை ஏற்படுத்தி விட்டனர் என்றும் கூறு கின்றனர். ஒருவேளை அவர்கள் கூறுவது உண்மையென்றால் அதுவே தீவிரமான விஷயம்தான். அதனால்தான் சிபிஐ விசாரணை கோருகிறோம்’’ என்றார்.
மூத்த வழக்கறிஞர் ஆர்.காந்தி வாதிடும்போது, ‘‘மாணவர்களின் அறவழிப் போராட்டம் அமைதி யாகத்தான் நடந்தது. திடீரென 15 ஆயிரம் போலீஸாரைக் குவித்து தடியடி நடத்தியதால்தான் வன் முறை வெடித்தது. தடியடி நடத்த உத்தரவிட்ட போலீஸ் அதிகாரி யார், உத்தரவு எங்கிருந்து வந்தது என் பதை முதலில் தெளிவுபடுத்த வேண் டும். தடியடி நடத்த உத்தரவிட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கலவரத்தைத் தூண்டிய போலீஸாருக்கு ரூ.10 ஆயிரம் நிதியுதவி அளிக்கப்படும் என காவல் ஆணையர் ஜார்ஜ் கூறியிருப்பது வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களை மேலும் அசிங்கப்படுத்துவதற்கு சமம். இதுதொடர்பாக நீதி விசாரணை நடத்தினால் மட்டுமே பல உண்மைகள் வெளியே வரும்’’ என்றார்.
இதையடுத்து நீதிபதி ஆர்.மகா தேவன், அரசு தலைமை வழக்கறி ஞர் ஆர்.முத்துக்குமாரசாமியிடம், ‘‘ஜல்லிக்கட்டுக்காக அமைதியாகப் போராடியவர்கள் மீது ஏன் தடியடி நடத்தப்பட்டது? வன்முறையில் ஈடுபட்ட போலீஸார் மீது என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறீர்கள்? வன்முறை சம்பவங்களால் பாதிக் கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க மறுத்தது ஏன்? என்ற 3 கேள் விகளுக்கும் 2 வாரத்தில் பதிலளிக்க வேண்டும்’’ என உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தார்.
இந்த போராட்டத்தின்போது கலவரம் ஏற்படாமல் மாணவர்களை திறமையாக கையாண்ட திருச்சி மாநகர காவல் துணை ஆணையர் மயில்வாகனனை நீதிபதி ஆர்.மகா தேவன் நேற்று நேரில் அழைத்து பாராட்டினார்.