

அதிமுக உறுப்பினர் 89 வயக்காட்டு பொம்மைகள் எனக் கூறியதை அவைக் குறிப்பில் இருந்து நீக்காததைக் கண்டித்து திமுக உறுப்பினர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து சட்டப்பேரவை நிகழ்வுகளில் பங்கேற்றனர்.
சட்டப்பேரவையில் நேற்று முன் தினம் நடைபெற்ற மின் துறை மானியக் கோரிக்கை மீதான விவா தத்தில் பேசிய அதிமுக உறுப்பினர் முத்தையா, 89 வயக்காட்டு பொம்மைகள் என பேசினார். இதை அவைக் குறிப்பில் இருந்து நீக்கக்கோரி திமுகவினர் தொடர் அமளியில் ஈடுபட்டனர். இதனால் நேற்று முன்தினம் சட்டப்பேரவை ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், நேற்று சட்டப்பேர வைக்கு வந்த எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக உறுப்பினர்கள் அனைவரும் தங்கள் சட்டையில் கருப்பு பேட்ஜ் அணிந்து வந்தனர்.
‘எதிர்க்கட்சி உறுப்பினர்களை வயக்காட்டு பொம்மைகள் எனக் கூறிய ஆளுங்கட்சி உறுப்பினருக்கு கண்டனம்’ என்ற வாசகம் அதில் இடம்பெற்றிருந்தது.