

இன்று இந்தியாவே திரும்பிப் பார்க்கும் வகையில் சென்னை அதிர்ந்துகொண்டிருக்கிறது. மெரினாவை நோக்கி மாணவர்களும் இளைஞர்களும் மட்டுமல்ல, பெண்களும் பெற்றோர்களும் குழந்தைகளும் தொடர்ந்து திரண்டவண்ணம் உள்ளனர். ஜல்லிக்கட்டு அனுமதி பெறுவதற்காக செய்யும் இந்த அறப்போராட்டம் இனிவரும் தமிழகத்தின் முக்கியப் பிரச்சினைகளுக்கும் முன்னெடுக்கப்படுமா?
ஏனெனில் சமீபத்தில் தமிழகத்தை உலுக்கியெடுத்த காவிரிப் பிரச்சினைக்குக்கூட இவ்வளவு மக்கள் திரண்டதில்லை. அதற்குமுன் கர்நாடகத்தில் தமிழர்கள் அடிவாங்கியபோதும்கூட இவ்வளவு எழுச்சி இல்லை. அதற்குமுன்பு இலங்கைப் போரில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டபோதும் இப்படியெல்லாம் நாம் திரளவில்லை.
மேலும் தமிழகத்தில் அவ்வப்போது தொடரும் ஆணவக் கொலைகளுக்கு எதிராக நாம் திரண்டிருக்கிறோமா?
இப்போது விழித்துக்கொண்ட தமிழ் இளைஞர் கூட்டம் இனியாவது தமிழகத்தில் உருவாகும் எத்தகைய வாழ்வாதார பிரச்சினைகளுக்கும் திரளுவார்களா? அல்லது ஜல்லிக்கட்டோடு இது கூடி கலைந்துவிடுமா? தங்கள் கருத்து என்ன?
வாசகர்கள் தங்கள் கருத்துகளை இங்கே பகிரவும்.