Published : 12 Jun 2016 09:19 AM
Last Updated : 12 Jun 2016 09:19 AM

3 மாவட்டங்களில் 113 தொழிற்சாலைகளில் ஆய்வு: குழந்தைத் தொழிலாளர் எவரும் பணியில் இல்லை - தொழிலக பாதுகாப்புத் துறை தகவல்

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய 3 மாவட்டங்க ளில், 113 தொழிற்சாலைகளில் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறை மேற்கொண்ட ஆய்வில் அங்கு குழந்தைத் தொழிலாளர்கள் எவரும் பணியில் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ஜூன் 12-ம் தேதி ‘குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு நாள்’ கடைபிடிக்க வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது. அதனைத் தொடர்ந்து, துறையின் இயக்குநர் போஸ் உத்தரவின்பேரில், கூடுதல் இயக்குநர் கு.காளியண்ணன் தலைமையில் 7 குழுக்கள், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய 3 மாவட்டங்களில் உள்ள 113 தொழிற்சாலைகளில் குழந்தைத் தொழிலாளர்கள் பணியில் உள்ளனரா என கடந்த புதன், வியாழன், வெள்ளி ஆகிய 3 நாட்கள் ஆய்வு மேற்கொண்டன.

அந்த குழுக்கள் செங்கல் சூளைகள், அரிசி ஆலைகள் மற்றும் பிற இன்ஜினியரிங் தொழிற்சாலை களில் ஆய்வு நடத்தின. அந்த ஆய்வில், தொழிற்சாலைகளில் குழந்தைத் தொழிலாளர் எவரும் பணியில் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. ஆய்வின்போது, குழந்தைத் தொழிலாளர் முறையை தடுப்பது தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதுடன், குழந்தைத் தொழிலாளர்கள் பணியில் அமர்த்தப்படவில்லை என்ற வாசகத்தை தொழிற்சாலைகளில் எழுதி வைக்குமாறு அறிவுறுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, துறை யின் சென்னை தலைமை அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், அலுவ லர்கள் மற்றும் பணியாளர்கள் பங்கேற்று குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

அதில், “இந்திய அரசியல மைப்பு விதிகளின்படி கல்வி பெறுவது குழந்தைகளின் அடிப்படை உரிமை என்பதால், 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை ஒருபோதும் எந்தவித பணிகளிலும் ஈடுபடுத்த மாட்டேன் எனவும், அவர்கள் பள்ளிக்கு செல்வதை ஊக்குவிப்பேன் எனவும், குழந்தைத் தொழிலாளர் முறையை முற்றிலுமாக அகற்ற சமுதாயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துவேன் என்றும், தமிழகத்தை குழந்தைத் தொழிலாளர் அற்ற மாநிலமாக மாற்றுவதற்கு என்னால் இயன்றவரை பாடுபடுவேன் எனவும் உளமார உறுதி கூறுகிறேன்” என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x