மதுரை மாணவிக்கு திருக்குறள் செல்வர் விருது

மதுரை மாணவிக்கு திருக்குறள் செல்வர் விருது
Updated on
1 min read

மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் நடத்திய ‘நாடாளுமன்றத்தில் திருக்குறள்’ போட்டியில் வெற்றி பெற்ற மதுரை மாணவிக்கு மத்திய அமைச்சர்கள் திருக்குறள் செல்வர் விருது வழங்கினர்.

மதுரை மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற நீதித் துறை உறுப்பினர் செல்வராஜ். இவரது மகள் லோசினி கார்த்திகா. மதுரை கேத்தி பள்ளியில் பிளஸ் 1 படிக்கிறார். 1,330 திருக்குறளையும் ஒப்புவித்தல், எழுதுதல் என திருக்குறளில் அனைத்து நிலைகளிலும் புலமை பெற்ற லோசினி கார்த்திகா, பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார்.

இந் நிலையில் கடந்த மாதம் மத்திய மனித வள மேம்பாட்டுத் துறையும், திருக்குறள் மாணவர்-இளைஞர் மன்றமும் இணைந்து, நாடாளுமன்றத்தில் திருக்குறள் என்ற விழாவை டெல்லியில் நடத்தியது. இதில் மாணவி லோசினி கார்த்திகா, திருக்குறளில் ஒரு அதிகாரத்தை முழுமையாக ஒப்புவித்தும், குறள்களுக்கான விளக்கங்களை அளித்தும் முதலிடம் பெற்றார்.

இதற்காக அவருக்கு நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற விழாவில் திருக்குறள் செல்வர் விருது வழங்கப்பட்டது. இந்த விருதை மாணவியிடம் மத்திய அமைச்சர்கள் ஸ்மிருதி ராணி, வெங்கையா நாயுடு ஆகியோர் வழங்கினர். விருது, பதக்கம், சான்றிதழுடன் மதுரை திரும்பிய லோசினியை, ஆசிரியர்கள், உறவினர்கள், சக மாணவர்கள் பாராட்டினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in