Published : 25 Jun 2016 09:21 AM
Last Updated : 25 Jun 2016 09:21 AM

தேர்தல் செலவுக் கணக்கை தாக்கல் செய்யாத 165 வேட்பாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப தயாராகிறது தேர்தல் ஆணையம்

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி களின் வேட்பாளர்கள் 17 பேர் உட்பட 165 பேர் இன்னும் தேர்தல் செலவுக் கணக்கை தாக்கல் செய்ய வில்லை. இவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப தேர்தல் ஆணையம் தயாராகி வருகிறது.

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு கடந்த மே 16-ம் தேதி நடந்தது. முன்னதாக, ஏப்ரல் 22-ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கி, 29-ம் தேதியுடன் முடிந்தது. இறுதியாக 2-ம் தேதி வெளியிடப்பட்ட இறுதி வேட்பாளர் பட்டியலின்படி, அங்கீகரிக்கப்பட்ட, பதிவு செய்யப்பட்ட கட்சிகள் மற் றும் சுயேச்சைகள் என 3,728 பேர் போட்டியிட்டனர்.

தேர்தல் ஆணைய விதிகளின் படி, ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளரும் அதிகபட்ச மாக ரூ.28 லட்சம் மட்டுமே செல வழிக்க வேண்டும். வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்ட நாள் முதல், வேட்பாளரின் செலவுக் கணக்கை, தேர்தல் ஆணையமும் கண்காணிக்கும்.

அதே நேரம், தேர்தல் நடக்கும் நாளுக்குள் 3 முறை அப்போதைய கணக்குகளை, தேர்தல் ஆணையத் துக்கு வேட்பாளர் சமர்ப்பிக்க வேண்டும். இது தவிர, இறுதி கணக்கை, தேர்தல் முடிவு அறிவிக் கப்பட்ட நாளில் இருந்து 30 நாட்களுக்குள் வேட்பாளர்கள் ஆணையத்துக்கு சமர்ப்பிக்க வேண் டும். இதன்படி, வேட்பாளர்கள் இறுதி செலவுக் கணக்கை சமர்ப்பிக்க கடந்த 18-ம் தேதி இறுதி நாளாகும். அன்றுவரை, 3,563 பேர் கணக்குகளை சமர்ப்பித்துள்ளனர்.

இது தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறியதாவது:

வேட்பாளர்கள் இறுதி செலவுக் கணக்கை சமர்ப்பிக்காவிட்டால், ஆணையம் நோட்டீஸ் அனுப்பும். தொடர்ந்து அவருக்கு கணக்கு சமர்ப்பிக்க கால அவகாசம் வழங் கப்படும். அதைத் தொடர்ந்தும் சமர்ப்பிக்காவிட்டால், ஆணையம் நடவடிக்கை எடுக்கும். இதற்கான உத்தரவு வந்து 3 ஆண்டுகளுக்கு அவர் எந்தத் தேர்தலிலும் போட்டி யிட முடியாது.

தமிழகத்தில் கடந்த 18-ம் தேதி இறுதி நாள் முடிந்த நிலையில், அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் வேட்பாளர்கள் 17 பேர், பதிவு செய்யப்பட்ட கட்சிகளின் வேட் பாளர்கள் 61 மற்றும் சுயேச்சைகள் என 165 பேர் இன்னும் கணக்கு அளிக்கவில்லை. இவர்கள் பட்டி யல் தற்போது தயாரிக்கப்பட்டு வருகிறது. இது தேர்தல் ஆணை யத்துக்கு அனுப்பப்படும். அதன் பின், தேர்தல் ஆணையம் சம்பந் தப்பட்ட வேட்பாளர்களுக்கு நோட் டீஸ் அனுப்பும்.

பட்டியல் திருத்தம்

வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் தொடங்கி உள்ளன. இது வழக்கமான பணிதான். ஆன்லைன் மூலம் திருத்தப் பணிகளை எளி மைப்படுத்த முயற்சிகள் செய்து வருகிறோம். சென்னையில் வாக்கா ளர் பட்டியலில் விடுபட்டவர்களை சேர்த்தல், நிராகரிக்கப்பட்ட விண் ணப்பங்கள் மீதான காரணங்கள் ஆய்வு, தெரு வாரியாக விவரங் களை இணையதளத்தில் பதிவு செய்தல் போன்ற பணிகள் நடந்து வருகின்றன.

சென்னையில் வாக்காளர்கள் வசதிக்காக, வாக்குச்சாவடி அமை விடங்களை மாற்றியமைக்கும் பணிகளையும் தற்போது தொடங்கி உள்ளோம். விரைவில் இப்பணிகள் முடிக்கப்படும்.

தமிழகத்தில் வாக்குப்பதிவு சத வீதம் குறைந்த பகுதிகளில் கருத் துக் கணிப்பு நடத்தும் பணிகள் தாமதமாக தொடங்கப்படும். இதற் கான கேள்விகள் ஒப்புதலுக்காக தேர்தல் ஆணையத்துக்கு அனுப் பப்பட்டுள்ளது. ஒப்புதல் பெற்ற பின், ஆய்வுப் பணிகள் தொடங்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x