Published : 02 Mar 2015 03:49 PM
Last Updated : 02 Mar 2015 03:49 PM

ட்விட்டரில் வாழ்த்தித் தள்ளி முந்திய அஜித் ரசிகர்கள்!

நடிகர் அஜித்குமார் - ஷாலினி தம்பதிக்கு இன்று அதிகாலை 4.30 மணியளவில் ஆண் குழந்தை பிறந்தது. இதையடுத்து, அந்தத் தம்பதியை வாழ்த்தும் வகையில், அஜித் ரசிகர்கள் உருவாக்கிய #KuttyThala என்ற ஹேஷ்டேக், ட்விட்டரில் திங்கள்கிழமை காலையில் இருந்து தொடர்ச்சியாக இந்திய அளவிலான ட்ரெண்டிங்கில் முன்னிலை வகித்துள்ளது. இடையில், உலக அளவிலான ட்ரெண்டிங்கிலும் இந்த ஹேஷ்டேக் இடம்பெற்றது.

நொடிக்கு 20-க்கும் மேற்பட்ட ட்வீட்கள் பதியப்பட்டால் மட்டுமே இந்த அளவுக்கு கவனம் பெறுவது சாத்தியம். நடிகர் அஜித்துக்கு அவரது ரசிகர்கள் தங்களது எழுத்து - புகைப்படம் - போட்டோஷாப் மூலம் விதவிதமான கற்பனை, படைப்பாற்றல் மூலம் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். #KuttyThala என்ற ஹேஷ்டேகை தாங்கி, நம் கண்ணில் பட்ட ட்வீட்களில் சில:

மங்காத்தா மாலிக்: தலய பார்த்தாலே போதும்னு நினைக்கறவங்களுக்கு தலமகன் பொறந்துருக்காரு!

சின்ன குமார்: பிறக்கிற எல்லாருமே குட்டித்தலையோட தாம்ல பொறப்பாங்க!

பெயரில்லாதவர்: அவர் 1st வந்தார் அதனால் May 1st.. இவர் 2nd வந்தார் அதனால் March 2nd..

விக்கி: தல பாடுகிறார். என் வானத்தில் ஒரு நட்சத்திரம் புதிதாக பூ பூத்து சிரிக்கிறதே

காப்பி கேட்: பிறக்கும் போத "ஸ்பைக்ஸ்" ஹேர் ஸ்டைல்ல பிறந்திருக்கார்.

ரிலாக்ஸ்: பிறந்தது என்னமோ நீ இரண்டாவதாக இருக்கலாம்... ஆனால் நீ என்றும் "தல" பிள்ளை.

சுரேஷ் குமார்: இந்த உலகத்துல உன்னவிட அழகான ஒருத்தர் இருப்பாங்களானு நினைத்தேன்... இப்போ வந்துட்டாரு குட்டி தல...

பிராவோ சுரேஷ்: ஜாதகம் பாக்கல நியூமராலஜி பாக்கல ஊரே ஒன்னா சேர்ந்து ஒரே பேர் வச்சிட்டாங்க. குட்டி தல.

சரவணா: உன் பெயரால் நடக்கும் பிறந்தநாள் அர்ச்சனையை ஏற்றுக்கொள்ள தவம் கிடக்கின்றன எல்லா தெய்வங்களும்.

அரவிந்த் ராம்குமார்: இனிமேல் தல போல வருமான்னு கேக்கமுடியாது; அதான் வந்துட்டாம்ல குட்டி தல.

வழிப்போக்கன்: இப்போவே எல்லா பொண்ணுங்களும் லவ் யூ சொல்ல ஆரம்பிச்சிட்டாங்க.!!!! #குட்டிதல

சரவணன்: எல்லாமே இனிமேல் நல்லாத்தான் நடக்கும்; பட்டாசும் சும்மாவே கொளுத்தாம வெடிக்கும்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x