‘தி இந்து’ - பொதிகை தொலைக்காட்சி இணைந்து வழங்கும் எம்.எஸ்.சுப்புலட்சுமியின் வாழ்க்கைத் தொடர்: 38-வது வாரமாக இன்று ஒளிபரப்பு

‘தி இந்து’ - பொதிகை தொலைக்காட்சி இணைந்து வழங்கும் எம்.எஸ்.சுப்புலட்சுமியின் வாழ்க்கைத் தொடர்: 38-வது வாரமாக இன்று ஒளிபரப்பு
Updated on
1 min read

எம்.எஸ்.சுப்புலட்சுமியின் இசைப் பயணத்தை பிரதிபலிக்கும் வகை யில் பொதிகை தொலைக்காட்சியில் சனிக்கிழமைதோறும் இரவு 9.30 மணிக்கு ‘குறையொன்றுமில்லை’ என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.

‘தி இந்து’ நாளிதழுடன், பொதிகை தொலைக்காட்சி இணைந்து வழங்கி வரும் இந்த நிகழ்ச்சியில் இசை மேதை எம்.எஸ்.சுப்புலட்சுமி பற்றிய அரிய தகவல்கள், புகைப்படங்கள், பாடல்கள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.

அதன் அடிப்படையில் இன்று இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாக வுள்ள 38-வது அத்தியாயத்தில், இந்தியில் உருவான ‘மீரா’ படத் தில் இடம்பெற்றுள்ள முக்கிய பாடல்களின் தொகுப்பு இடம்பெற உள்ளது.

இன்று இரவு ஒளிபரப்பாக விருக்கும் இந்த நிகழ்ச்சியின் மறு ஒளிபரப்பை செவ்வாய்க்கிழமை இரவு 9.30 மணிக்கு காண லாம்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in