Published : 28 Sep 2016 09:03 AM
Last Updated : 28 Sep 2016 09:03 AM

வருவாய் நீதிமன்ற காலிப் பணியிடங்களால் தேங்கிக் கிடக்கும் குத்தகை நில வழக்குகள்

குத்தகை நிலம் தொடர்பாக அதன் உரிமையாளருக்கும், குத்தகை தாரருக்கும் இடையேயான வழக்கு களை தனித் துணை ஆட்சியர் தலைமையிலான வருவாய் நீதி மன்றங்கள் விசாரிக்கின்றன. தமிழகத்தில் லால்குடி, திருச்சி, மன்னார்குடி, திருவாரூர், மயிலாடு துறை, நாகப்பட்டினம், கடலூர், மதுரை, திருநெல்வேலி, தஞ்சாவூர் ஆகிய 10 இடங்களில் வருவாய் நீதிமன்றங்கள் உள்ளன.

2016, ஜூன் 30-ம் தேதி நிலவரப்படி தமிழக வருவாய் நீதிமன்றங்களில் 7,052 வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்துள்ளது. இதற்கு, வருவாய் நீதிமன்றங்களில் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படா ததும், ஒவ்வொரு வருவாய் நீதி மன்றத்திலும் அதிக மாவட்டங்களின் வழக்குகள் விசாரிக்கப்படுவதுமே காரணம் என்று கூறப்படுகிறது.

இது தொடர்பாக கிருஷ்ண கிரியைச் சேர்ந்த எம்.சி.குப்பன், ‘தி இந்து உங்கள் குரல்’ பகுதியில் பதிவு செய்திருந்தார். இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, “குத்தகை நிலப் பிரச்சினை தொடர்பாக எனக்குச் சாதகமாக தீர்ப்பு வந்து 5 ஆண்டுகளுக்கு மேலாகியும் இதுவரை எனக்கு நிலம் சுவாதீனம் செய்து தரப்படவில்லை. இதற்கு, செயலாக்க வருவாய் ஆய்வாளர் பணியிடம் காலியாக இருப்பதே காரணம்” என்றார்.

திருச்சி மற்றும் லால்குடி வருவாய் நீதிமன்றங்களில் மட்டும் 1,700-க்கும் அதிகமான வழக்குகள் நிலுவையில் இருப்பதாகக் கூறப் படுகிறது. இதன்மூலம் வருவாய் நீதிமன்றங்களை தமிழக அரசு தொடங்கியதன் நோக்கம் நிறை வேறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

காரணம் என்ன?

இதுதொடர்பாக வருவாய் நீதி மன்ற வட்டாரங்களில் விசாரித்த போது, “திருச்சி வருவாய் நீதி மன்றத்தில் செயலாக்க வருவாய் ஆய்வாளர் பணியிடம் 3 ஆண்டு களுக்கும் மேலாக காலியாக உள்ளது. செயலாக்க வருவாய் ஆய்வாளர் பணியிடத்தை நிரப்ப நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியர் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

மனுதாரர், எதிர் மனுதாரர் ஆகியோருக்கு போதிய காலஅவகாசம் கொடுத்து, இறுதியாகவே நிலச் சுவாதீனம், நிலத்தில் இருந்து வெளியேற்றுதல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்கிறோம். இதனாலேயே நிலுவை வழக்குகள் அதிகமாக இருப்பதாகத் தெரிகிறது” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x