Published : 23 Jul 2016 09:03 PM
Last Updated : 23 Jul 2016 09:03 PM

தமிழகம், புதுச்சேரியில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வெப்பச் சலனம் காரணமாக ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம், ''தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் வெப்பச் சலனம் காரணமாக ஒரு சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை ஒரு சில இடங்களில் பெய்யக்கூடும். குறைந்தபட்ச வெப்பநிலையாக 78.8 டிகிரி ஃபாரன்ஹீட், அதிகபட்ச வெப்பநிலையாக 93.2 டிகிரி ஃபாரன்ஹீட் இருக்கக்கூடும்.

தமிழகத்தில் வெப்பநிலையை பொறுத்தவரை நேற்று அதிகபட்சமாக தூத்துக்குடியில் 95 டிகிரி ஃபாரன்ஹீட், மதுரையில் 94.28, கரூரில் 94.1, சென்னையில் 90.86 டிகிரி ஃபாரன்ஹீட் பதிவாகி உள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக வால்பாறையில் 31.4 மி.மீ மழை பதிவாகி உள்ளது'' என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x