

தமிழகத்தில் மாவட்டங்களை இணைக்கும் முக்கிய சாலைகளில் பராமரிப்பு மற்றும் புதுப்பிப்பு பணி கள் தனியாரிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளன. அடுத்தகட்டமாக அந்த சாலைகளில் சுங்கச்சாவடி களை அமைத்து கட்டணம் வசூ லிக்க தமிழக அரசு திட்டமிடப் பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா 300 கி.மீ. தூரத்துக்கு மாவட்ட முக்கிய சாலைகள் உள்ளன. மாநில நெடுஞ்சாலைத்துறை பராமரிப்பில் புதிய கொள்கையை தமிழக அரசு தீவிரமாக அமல்படுத்தி வரு கிறது.
தற்போது சாலை பணியாளர்கள் மற்றும் ஆய்வாளர்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை பராமரிப்பு மற்றும் மேம்பாடு பணி களை படிப்படியாக தனியார்களிடம் வழங்கி வருகிறது.
இதுவரையில் 5 மாவட்டங் களில் சாலை பராமரிப்பு பணிகள் தனியார்களிடம் வழங்கப்பட்டுள் ளன. டெண்டர் மூலம் தேர்வு செய் யப்பட்ட தனியார் நிறுவனங்கள் மூலம் அடுத்த 5 ஆண்டுகளுக்கு சாலை பராமரிப்பு பணிகள் மேற் கொள்ளப்படும். இதையடுத்து, அடுத்தகட்டமாக தனியார்களிடம் வழங்கப்பட்டுள்ள சாலைகளை மேலும் மேம்படுத்தி சுங்கச்சாவடி கள் அமைத்து கட்டணம் வசூலிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான பேச்சுவார்த்தையில் தமிழக அரசு அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
இது தொடர்பாக மாநில நெடுஞ்சாலைத்துறை சாலை ஆய்வாளர் சங்க மாநில பொதுச் செயலாளர் எம்.மாரிமுத்து ‘தி இந்து’விடம் கூறியதாவது:
நெடுஞ்சாலைத்துறை பராமரிப் பில் புதிய கொள்கையை தமிழக அரசு தீவிரமாக அமல்படுத்தி வரு கிறது. அதன்படி, பொள்ளாச்சி, விருதுநகர், ராமநாதபுரம் உட்பட 5 மாவட்டங்களில் சாலைகள் பரா மரிப்பு, புதுப்பித்தல், சிறிய பாலங் கள் கட்டுதல் ஆகிய பணிகளை தனியாரிடம் படிப்படியாக ஒப் படைத்து வருகிறது. தனியார் நிறுவனங்கள் மூலம் சாலைகளை அடுத்த 5 ஆண்டுகளில் மேம்படுத்தி பின்னர், சுங்கச்சாவடிகள் அமைத்து கட்டணம் வசூலிக்கப்படவுள்ளன. இதற்கான பணிகள் தற்போது தஞ்சாவூர் புதுக்கோட்டை, மதுரை கம்பம் சாலைகளில் நடந்து வருகின்றன.
ஏற்கெனவே, தேசிய நெடுஞ் சாலைகளில் வசூலிக்கப்படும் சுங்கக் கட்டணங்களால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இந் நிலையில், மாநில நெடுஞ்சாலைத் துறை சார்பில் சுங்கச்சாவடிகளை அமைத்து கட்டணம் வசூலித்தால் அனைத்து தரப்பு மக்களும் கடுமை யாக பாதிக்கப்படுவார்கள். எனவே, சாலை மேம்பாடு, பராமரிப்பு பணி களை தனியார்மயமாக்குவதை கைவிட்டு, தமிழக அரசே இதற் கான பணிகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இது தொடர்பாக மாநில நெடுஞ் சாலைத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘சில மாவட்ட பகுதி களில் சாலைகள் புதுப்பிப்பு மற்றும் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள் ளன. ஆனால், சுங்கச் சாவடிகள் அமைத்து கட்டணம் வசூலிப்பது பற்றி தமிழக அரசு இதுவரையில் எந்த முடிவும் எடுக்கவில்லை’’ என்றனர்.
தனியார்களிடம் வழங்கப்பட்டுள்ள சாலைகளை மேலும் மேம்படுத்தி சுங்கச்சாவடிகள் அமைத்து கட்டணம் வசூலிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.