மருத்துவக் கழிவுகளை அழிப்பதில் விதிமீறும் மருத்துவமனைகள் மீது குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்: மாசு கட்டுப்பாடு வாரியத்துக்கு பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

மருத்துவக் கழிவுகளை அழிப்பதில் விதிமீறும் மருத்துவமனைகள் மீது குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்: மாசு கட்டுப்பாடு வாரியத்துக்கு பசுமை தீர்ப்பாயம் உத்தரவு
Updated on
1 min read

மருத்துவக் கழிவுகளை அழிப்பதில் விதிகளை மீறும் மருத்துவ மனைகள் மீது குற்ற நடவடிக்கை எடுக்குமாறு தமிழக மாசு கட்டுப்பாடு வாரியத்துக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் திரவ மருத்துவக் கழிவுகள் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கக் கோரி சென்னை திருவான்மியூரை சேர்ந்த ஜவஹர்லால் சண்முகம் என் பவர் சென்னையில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென்மண்டல அமர்வில் வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த அமர்வு, மருத்துவக் கழிவுகளை மருத்துவமனைகள் எவ்வாறு அழிக்கின்றன என்பதை ஆய்வு செய்ய மாசு கட்டுப்பாடு வாரியத்துக்கு உத்தரவிட்டது.

இந்நிலையில், அமர்வின் நீதித்துறை உறுப்பினர் நீதிபதி பி.ஜோதிமணி, தொழில்நுட்ப உறுப்பினர் பி.எஸ்.ராவ் முன்பு இந்த மனு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, மாசு கட்டுப்பாடு வாரியம் தாக்கல் செய்த அறிக்கை யில் கூறியிருந்ததாவது:

சென்னையில் உள்ள அனைத்து மருத்துவமனைகளும் தங்களது மருத்துவக் கழிவுகளை, மாசு கட்டுப்பாடு வாரியத்தால் அங்கீகரிக் கப்பட்ட 2 நிறுவனங்களிடம்தான் வழங்க வேண்டும். ஆனால், 21 மருத்துவமனைகள் தங்களது மருத்துவக் கழிவுகள் முழுவதையும் அவ்வாறு வழங்குவதில்லை. வேறு வகையில் அவற்றை அழிக்கின்றனர் என்பது ஆய்வில் தெரிந்தது. இதையடுத்து, மருத் துவக் கழிவு மேலாண்மை விதி களின்படி, கழிவுகள் அழிக்கப்படு வதை கண்காணிக்க குழு அமைக்குமாறு சுகாதாரத் துறைக்கு மாசு கட்டுப்பாடு வாரியத் தலைவர் அறிவுறுத்தியுள்ளார்.

இவ்வாறு அதில் கூறப் பட்டிருந்தது.

மனுதாரர் ஜவஹர்லால் சண் முகம் ஆஜராகி கூறியதாவது:

கட்டிடங்களை கட்டி முடித்ததற் கான சான்றுகள் பெறப்படாமலே, மருத்துவமனைகள் செயல்பட மாசு கட்டுப்பாடு வாரியம் இசைவு ஆணை வழங்குகிறது. இதுவே விதிமீறல்தான்.

பல மருத்துவமனை நிர்வாகங் கள், சிகிச்சைக்கு பயன்படுத்தப் பட்ட பொருட்களை அங்கீகரிக்கப் பட்ட மருத்துவக் கழிவு அழிக்கும் நிறுவனத்திடம் வழங்குவதில்லை. அந்த கழிவுகள் மறுசுழற்சி செய்யப் பட்டு, மீண்டும் விற்பனைக்கு வரும் அபாயம் உள்ளது. எனவே, விதி மீறுவோர் மீது குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏற்கெனவே சில மருத்துவ நிறுவனங்களில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக சிபிசிஐடி விசாரணை நடத்தியது. அந்த அறிக்கை வழங்கப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதைத் தொடர்ந்து, அமர்வு உறுப்பினர்கள் பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது:

மருத்துவக் கழிவுகள் அழிப்பு கண்காணிப்பு குழு அமைக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என சுகாதாரத் துறை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். விதிகளை மீறி மருத்துவக் கழிவுகள் அழிக்கப்படுவது தொடர் பான விசாரணை அறிக்கையை சிபிசிஐடி தாக்கல் செய்ய வேண்டும். மருத்துவக் கழிவுகள் அழிப்பில் விதிமீறும் நிறுவனங்கள் மீது மாசு கட்டுப்பாடு வாரியம் குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு உத்தரவிட்ட உறுப் பினர்கள், அடுத்த விசாரணையை செப்டம்பர் 14-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in