

திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு வரும் 15-ம் தேதி சென்னையில் இறைச்சி விற்க தடை விதித்து சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது:
திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு வரும் 15-ம் தேதி சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து இறைச்சிக் கூடங்களும் மூடப்படுகிறது. அதேபோல் ஆடு, மாடு மற்றும் இதர இறைச்சி விற்பவர்கள், பல்பொருள் அங்காடிகள் மற்றும் வணிக வளாகங்களில் பதப்படுத்திய இறைச்சி விற்பனை செய்யவும் தடை விதிக்கப்படுகிறது. அதற்கு வியாபாரிகள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட் டுள்ளது.