

தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் கடந்த 3 நாட்களாக பல இடங்களில் மழை பெய்யுன் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியதாவது: கடந்த சில தினங்களாக தென் மேற்கு வங்கக் கடலில் தீவிர காற்றழுத்த பகுதி நிலை கொண்டுள்ளது. அது காற்றழுத்த தாழ்வு மண்ட லமாக மாறும் என 2 நாட்களாக எதிர்பார்க்கப்பட்டு வந்தது.
ஆனால் வளி மண்டலத்தில் ஏற்பட்ட காற்று முறிவு காரணமாக அது மாறாமல் உள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் அது வடக்கு நோக்கி நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் வாய்ப்பு நீடிக்கிறது. இந்நிலையில் தீவிர காற்ற ழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் கடந்த 3 நாட்களாக பல இடங்களில் மழை பெய்து வருகிறது.
இது படிப்படியாக குறையும் என்றாலும் அடுத்த 24 மணி நேரத்தில் கடலோர மாவட்டங்களில் பல இடங்களிலும், உள் மாவட்டங் களில் ஒரு சில இடங்களிலும் மழை பெய்யும்.
கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்யும். சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் மழை பெய்யலாம். தரைக் காற்று பலமாக வீசக்கூடும்.