

ராஜீவ் கொலை வழக்கு குற்ற வாளிகள் விடுதலை குறித்த தமிழக அரசின் முடிவுக்கு, தமிழக மக்கள் தேர்தலில் பாடம் புகட்டுவார்கள் என்று மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
சென்னை எண்ணூர் துறைமுகத்துக்கு மறைந்த தமிழக முதல்வர் காமராஜர் பெயரை வைக்க, மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கான விழா வரும் 26ம் தேதி, சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் பிரம்மாண்டமாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளைப் பார்வையிட மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச் சர் ஜி.கே.வாசன் ராயப் பேட்டை மைதானத்துக்கு வந்தார்.
அப்போது அவர் நிருபர் களிடம் கூறும்போது, ‘ராஜீவ் கொலை வழக்கு குற்றவாளிகளை, தமிழக அரசு விடுதலை செய்ய முடிவெடுத்தது, தேர்தலை முன்னிட்டு எடுக்கப்பட்ட நடவடிக்கை. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எவரும் இதை ஏற்க மாட்டார்கள்.
உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை, தமிழக அரசு தவறாக புரிந்துகொண்டுள்ளது. தமிழக அரசின் இந்த முடிவுக்கு, வரும் நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்’என்றார்.