பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்க ஆன்லைன் பதிவு நாள் விரைவில் அறிவிக்கப்படும்: அண்ணா பல்கலைக்கழகம் தகவல்

பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்க ஆன்லைன் பதிவு நாள் விரைவில் அறிவிக்கப்படும்: அண்ணா பல்கலைக்கழகம் தகவல்
Updated on
1 min read

பொறியியல் படிப்புக்கு விண்ணப் பிப்பதற்கான ஆன்லைன் பதிவு தேதி மற்றும் இதர விவரங்கள் பற்றிய அறிவிப்பு வெகு விரைவில் வெளியிடப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. எனவே, தேவையான சான்றிதழ் களை தயாராக வைத்திருக்குமாறு மாணவர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

தமிழகத்தில் 570-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள், அரசு பொறியியல் கல்லூரிகள், அரசு உதவி பெறும் கல்லூரிகள், தனியார் சுயநிதி கல்லூரிகள் என அனைத்து வகையான பொறியியல் கல்லூரி களும் அடங்கும். இக்கல்லூரிகளில் வழங்கப்படும் பிஇ, பிடெக் படிப்புகளில் ஏறத்தாழ 2 லட்சம் இடங்கள் பொது கலந்தாய்வு மூலமாக நிரப்பப்படுகின்றன. இக் கலந்தாய்வை உயர்கல்வித்துறை சார்பில் அண்ணா பல்கலைக்கழகம் நடத்துகிறது.

ஒவ்வோர் ஆண்டும் பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியான அடுத்த சில தினங்களில் பொறியியல் படிப்புக்கான விண்ணப்பம் வழங் கப்படும். கடந்த ஆண்டு முதல் காகித வடிவிலான விண்ணப்பம் வழங்கும் முறை நிறுத்தப்பட்டு ஆன்லைன் பதிவு முறை புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி, அண்ணா பல்கலைக்கழகத்தின் பிரத்யேக இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தில் மதிப்பெண் உள்ளிட்ட அனைத்து விவரங் களையும் பூர்த்தி செய்ய வேண்டும். பின்னர் அந்த ஆன்லைன் விண்ணப் பத்தை பிரின்ட் எடுத்து அண்ணா பல்கலைக்கழகத்துக்கு அனுப்ப வேண்டும். இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 12-ம் தேதி வெளியிடப்படும் என்று முன் கூட்டியே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுவிட்டது. எனவே, பொறியியல் படிப்பில் சேர விரும்பும் மாணவ-மாணவிகள் பொது கலந்தாய்வுக்கான ஆன்லைன் பதிவு எப்போது தொடங்கும் என்று மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில், அண்ணா பல்கலைக்கழகத்தில் இயங்கும் தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைப் பிரிவின் செயலாளர் பேராசிரியை இந்துமதி ஆன்லைன் பதிவு தொடர்பாக நேற்று ஓர் அறிவிப்பை வெளியிட்டார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:

2017-ம் ஆண்டுக்கான பொறியி யல் மாணவர் சேர்க்கைக்கு ஆன் லைனில் பதிவு செய்யும் தேதி உள்ளிட்ட விவரங்கள் குறித்த அறிவிப்பு வெகு விரைவில் வெளியிடப் படும். எனவே, பொறியியல் படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் தேவையான சான்றிதழ்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமிருந்து முன்னரே வாங்கி வைத்துக்கொள்ளு மாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்க பின்வரும் சான்றிதழ்கள் தேவைப்படும். (எல்லா சான்றிதழ்களும் அனைவருக்கும் தேவைப்படாது. சான்றிதழின் தேவை நபருக்கு நபர் மாறுபடும்).

1. சாதிச் சான்றிதழ் (எஸ்சி, எஸ்டி, எஸ்சி-அருந்ததியினர், எம்பிசி, டிஎன்சி, பிசி, பிசி-முஸ்லிம்)

2. முதல் தலைமுறை பட்டதாரி என்பதற்கான சான்றிதழ் (தேவைப்பட்டால்)

3. இருப்பிடச் சான்றிதழ் (தேவைப்பட்டால்)

4.வருமானச் சான்றிதழ் (தேவைப்பட்டால்)

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in