

உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் டி.ரவீ்ந்திரன் விடுத்துள்ள சுற்றறிக்கை:
கடந்த மாதம் 16-ம் தேதி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையில் நடந்த நீதிபதிகள் முழு அமர்வுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, வழக்கறிஞர் சட்டம் 1961 பிரிவு 34(1)-ல் கொண்டு வரப்பட் டுள்ள சட்டத் திருத்தங்களை மறுபரிசீலனை செய்வது என முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இது தொடர்பான முடிவுகளை மேற் கொள்வதற்காக நீதிபதிகள் எஸ்.மணிக் குமார், எஸ்.நாகமுத்து, ராஜிவ் ஷக்தர், எம்.எம். சுந்தரேஷ் மற்றும் பி.என்.பிரகாஷ் ஆகியோர் அடங்கிய விதிகள் குழு அமைக்கப்பட்டு உள்ளது. இக்குழுவின் கூட்டம் கடந்த ஜூலை 1-ல் கூட்டப்பட்டது.
இக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவின்படி நீதிபதிகள் முழு அமர்வில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை தமிழகம்- புதுச்சேரியில் உள்ள அனைத்து மாவட்ட நீதிமன்ற நோட் டீஸ் போர்டுகளிலும் ஒட்டப்படும். மேலும் வழக்கறிஞர் சட்டத் திருத்தம் தொடர்பான கருத்துகள் மற்றும் கோரிக்கைகளை அந்தந்த மாவட்ட வழக்கறிஞர் சங்கத்தினர், விதிகள் குழுவிடம் நேரடியாகவோ அல் லது தலைமைப் பதிவாளர், அந்தந்த மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதிகள் வாயிலாகவோ விரைந்து சமர்ப்பிக்க வேண்டும்.