

மீத்தேன் எடுக்க தடை விதித்த தைப்போல, ஷேல் காஸ் எடுக்கும் திட்டத்துக்கும் தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார்
காவிரி பாசனப் பகுதியைப் பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக மத்திய, மாநில அரசுகள் அறிவிக்க வலியுறுத்தி, தஞ்சாவூரில் பேரழிப்புக்கு எதிரான பேரியக்கம் சார்பில் நேற்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
இதைவிட பேராபத்து
தஞ்சாவூர் பனகல் கட்டிடம் அருகே நடைபெற்ற இந்த உண்ணாவிரதப் போராட்டத்துக்கு, பேரழிப்புக்கு எதிரான பேரியக்கத் தலைவர் இரா.லெனின் தலைமை வகித்தார். உண்ணாவிரதப் போராட்டத்தை தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் த.வெள்ளையன் தொடங்கி வைத்தார். இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்து வைத்த வைகோ, பின்னர் செய்தியாளர் களிடம் கூறியதாவது:
மீத்தேன் எரிவாயு திட்டத்துக் கு தமிழக அரசு தடை விதித்தது. ஆனால், மத்திய அரசு தடை விதிக்கவில்லை. இதைவிட மிக பேராபத்தானது ஷேல் காஸ் திட்டம். இத்திட்டத்தின் மூலம் பொருளாதாரம், அந்நிய செலாவணி உயரும் என மத்திய அரசு கூறினாலும், தஞ்சை தரணி அடியோடு அழிந்துவிடும்.
காவிரி பாசனப் பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக அறிவிக்கப்பட்டால் தான் மீத்தேன், ஷேல் காஸ் போன்ற ஆபத்துகளைத் தடுக்க முடியும்.
ஷேல் காஸ் திட்டத் துக்குத் தமிழக அரசின் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் இன்னும் அனுமதி அளிக்கவில்லை. இத்திட் டத்துக்குத் தமிழக அரசு அனுமதி அளிக்கக் கூடாது என்றார்.