

தமிழகத்தில் தென் கடலோர மாவட்டங்களில், அடுத்த 24 மணி நேரத்துக்கு மழை நீடிக்க வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வானிலை ஆய்வு மைய இயக்குநர் கூறுகையில், "இலங்கை அருகே மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு நிலையானது குமரி அருகே தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ளது.
இதனால், அடுத்த 24 மணி நேரத்துக்கு தென் கடலோர மாவட்டங்களில் மழை நீடிக்க வாய்ப்பிருக்கிறது" இவ்வாறு அவர் கூறினார்.