Published : 05 Jun 2017 08:49 AM
Last Updated : 05 Jun 2017 08:49 AM

தென்காசி அருகே ரூ.1.36 கோடி கள்ள நோட்டுகள் பறிமுதல்: கைதான 2 பேரிடம் தீவிர விசாரணை

தென்காசி அருகே ஒரு வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.1 கோடியே 36 லட்சத்து 60 ஆயிரம் மதிப்புள்ள கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

தென்காசி காவல் நிலைய உதவி ஆய்வாளர் மாரிச்செல்வி மற்றும் போலீஸார், நேற்று முன்தினம் மாலை செங்கோட்டை ரோட்டில் வாகன சோதனை நடத் தினர். அப்போது, அந்த வழியாக வந்த 2 பேரை நிறுத்தி சோதனை யிட்டனர். அவர்களிடம், ரூ.2,000 கள்ள நோட்டுகள் 2 கட்டுகள் இருந் தன. அவற்றை பறிமுதல் செய்து போலீஸார் அவர்களிடம் தீவிர விசா ரணை மேற்கொண்டனர்.

பிடி பட்ட இருவரும் சங்கரன் கோவில் அருகே தலைவன் கோட்டையை சேர்ந்த சாமி துரை(49), சங்கரன்கோவிலைச் சேர்ந்த அசன்(61) என தெரிய வந்தது. அவர்கள் அளித்த தகவலின்பேரில், சுரண்டை பாரதி நகரில் உள்ள சாமிதுரையின் மற்றொரு வீட்டில் போலீஸார் சோதனை நடத்தினர். அங்கிருந்து ஒரு கோடியே 36 லட்சத்து 60 ரூபாய் மதிப்புள்ள புதிய 2 ஆயிரம் ரூபாய், 500 மற்றும்100 ரூபாய் கள்ள நோட்டுகள் பறி முதல் செய்யப்பட்டன.

தென்காசி காவல் ஆய்வா ளர் பாலமுருகன் வழக்கு பதிந்து, இருவரையும் கைது செய்தார். கைதான இருவர் மீதும் ஏற் கெனவே சில வழக்குகள் நிலுவை யில் உள்ளன. கொலை வழக்கு ஒன்றில் சாமிதுரை ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ளார். இவர்களுக்கு கள்ள நோட்டுகள் எங்கிருந்து கிடைத்தன, கள்ள நோட்டுகள் கடத்தலில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பதை கண்டறிய இருவரிடமும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x