

அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் பழ.கருப்பையா நீக்கப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா வெளியிட்ட செய்திக்குறிப்பில், '' அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து கொள்கை - குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும், முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்துக்கு மாசு ஏற்படும் வகையில் நடந்துகொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்துக்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், வட சென்னை தெற்கு மாவட்டத்தைச் சார்ந்த துறைமுகம் சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏ பழ.கருப்பையா கழகத்தின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார்.
கழக உடன்பிறப்புகள் யாரும் பழ.கருப்பையா உடன் எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
2011 சட்டமன்றத் தேர்தலில் துறைமுகம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் பழ.கருப்பையா. இவர் பேச்சாளர், எழுத்தாளர் என்பது குறிப்பிடத்தக்கது.