Published : 19 Apr 2017 07:20 AM
Last Updated : 19 Apr 2017 07:20 AM

இந்திய கடற்படையில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள ‘ஐஎன்எஸ் சென்னை’ போர்க் கப்பல் சாகசம்: அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் கண்டு களித்தனர்

இந்திய கடற்படையில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள ‘ஐஎன்எஸ் சென்னை’ போர்க் கப்பலின் வீரர்கள் நேற்று நடுக்கடலில் சாகசங்களைச் செய்து காட்டினர். இதை தமிழக அமைச்சர்கள், எம்பிக் கள், எம்எல்ஏக்கள் உள்ளிட்ட முக் கிய பிரமுகர்கள் கண்டு ரசித்தனர்.

இந்திய கடற்படையில் ‘ஐஎன்எஸ் சென்னை’ என்ற நவீன ரக போர்க் கப்பல் கடந்த 2016 நவம்பர் 21-ம் தேதி சேர்க்கப்பட்டது. ‘15-ஏ’ என்ற திட்டத்தின் கீழ் முற்றிலும் உள்நாட்டுத் தொழில்நுட்பத்தில் கட்டப்பட்ட 3-வது நவீன ரக போர்க் கப்பலான இது, மும்பையில் உள்ள மேற்கு பிராந்திய கடற்படை அதிகாரி கட்டுப்பாட்டில் உள்ளது. 7 ஆயிரத்து 500 டன் எடை கொண்ட இக்கப்பலில் தரையில் இருந்து மற்றொரு தரைப் பகுதியில் உள்ள இலக்கை தாக்கி அழிக்கும் பிரமோஸ் ஏவுகணை, தரையில் இருந்து வானில் உள்ள இலக்கை தாக்கி அழிக்கும் ஏவுகணை, நவீன ரக ரேடார் கருவிகள், நீர்மூழ்கிக் கப்பல்கள், ராக்கெட் லாஞ்சர்கள், 2 ஹெலிகாப்டர்கள் மற்றும் அணுசக்தி, உயிரியியல் மற்றும் ரசாயன தாக்குதல்களை முறியடிக்கும் கருவிகள் உள்ளன.

கடந்த 10-ம் தேதி மும்பையில் இருந்து புறப்பட்ட இக்கப்பல், 15-ம் தேதி சென்னை துறைமுகத் துக்கு வந்தது. நேற்று முன்தினம் இக்கப்பலை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னைக்கு அர்ப்பணித்து வைத்தார். இந் நிலையில், நேற்று இக்கப்பலில் தமிழக அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள், அரசு உயர் அதிகாரி கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் நடுக்கடலுக்கு அழைத்துச் செல்லப் பட்டனர்.

ஜெயக்குமார், ஓஎஸ் மணியன், செல்லூர் கே.ராஜு, ஆர்.பி.உதய குமார் உள்ளிட்ட 14 தமிழக அமைச்சர்கள், 4 எம்பிக்கள், 106 எம்எல்ஏக்கள் திரைப்பட நடிகர் பிரசாந்த், நடிகை ரேவதி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் இந்த கப்பலில் பயணம் செய்தனர். அவர்களைத் தமிழகம், புதுவைக்கான கடற்படை அதிகாரி அலோக் பட்நாகர் மற்றும் கப்பலின் கேப்டன் சி.ஆர்.பிரவீன் நாயர் ஆகியோர் வரவேற்றனர்.

நடுக்கடலில் ஐஎன்எஸ் ரன்வீர் மற்றும் ஐஎன்எஸ் சுமேதா ஆகிய இரு போர்க் கப்பல்களில் சாகச நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. போர்க் கப்பலில் இருந்து ஏவுகணைகள் மூலம் எதிரிகள் இலக்கைத் தாக்கி அழிப்பது, ஏவுகணைகள் மூலம் நீர்மூழ்கி கப்பலைத் தாக்கி அழிப்பது மற்றும் நடுக்கடலில் ஒரு கப்பலில் இருந்து மற்றொரு கப்பலுக்கு எரிபொருள் நிரப்புவது, ஆயுதங்களைப் பரிமாறிக் கொள்வது உள்ளிட்ட சாகச நிகழ்ச்சிகள் செய்து காண்பிக்கப்பட்டன.

‘ஐஎன்எஸ் சென்னை’ போர்க் கப்பலின் வீரர்களும் சாகசங்களைச் செய்து காட்டினர். கரையில் இருந்து 20 நாட்டிக்கல் மைல் தொலைவில் நடைபெற்ற இந்த சாகச நிகழ்ச்சிகளைக் காண சுமார் 4 மணி நேரம் அமைச்சர்கள் உள்ளிட்டோர் கப்பலில் பயணம் செய்தனர்.

முன்னதாக, நிதியமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறும் போது, “இந்தியக் கடற்ப டையில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள ‘ஐஎன்எஸ் சென்னை’ போர் கப்பல் சென்னையின் பெயரில் உருவாக்கப்பட்டது பெருமைக் குரியது. மாநிலத்தின் வரலாற்றை போற்றும் வகையில் இக்கப்பலின் சின்னமாக மஞ்சப்பட்டி காளை யின் சின்னம் இடம் பெற்றுள்ளது. கடற்படை வீரர்களின் வலிமை யையும், தியாகத்தையும் அறிந்து கொள்ளும் வகையில் இந்த பயணம் அமைந்துள்ளது. இன்றைய தினம் வரலாற்றில் ஒரு முக்கிய நாளாக அமைந்துள்ளது’ என்றார்.

தனது நான்கு நாள் பயணத்தை முடித்துக்கொண்டு ‘ஐஎன்எஸ் சென்னை’ போர்க் கப்பல் இன்று மும்பை திரும்பிச் செல்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x