Published : 19 Feb 2014 10:33 AM
Last Updated : 19 Feb 2014 10:33 AM

அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் 50 புதிய சிற்றுந்துகள்: முதல்வர் துவக்கிவைத்தார்

அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் 50 புதிய சிற்றுந்துகள்,185 புதிய பேருந்துகள் மற்றும் 109 புனரமைக்கப்பட்ட பேருந்துகளை முதல்வர் ஜெயலலிதா இன்று கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இது தொடர்பாக வெளியிடப்பட்ட அரசு செய்திக் குறிப்பில்: "பொதுமக்களின் போக்குவரத்துத் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் தமிழக அரசு புதிய பேருந்துகள் மற்றும் புதிய வழித்தடங்களை அறிமுகம் செய்து வருகிறது.

அந்த வகையில், சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகம் சார்பில் சென்னை மாநகர மக்களின் தேவையை நிறைவு செய்யும் வகையில் போக்குவரத்து இணைப்பில்லா பகுதிகளிலிருந்து அருகிலுள்ள பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையத்தை இணைக்கும் வகையில் 7 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 50 புதிய சிற்றுந்துகள்; 8 கோடியே 2 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 109 புனரமைக்கப்பட்ட பேருந்துகள்; என 35 கோடியே 56 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 185 புதிய பேருந்துகள்; என மொத்தம் 50 சிற்றுந்துகள், 185 புதிய பேருந்துகள் மற்றும் 109 புனரமைக்கப்பட்ட பேருந்துகளை முதல்வர் ஜெயலலிதா இன்று கொடியசைத்து துவக்கி வைத்தார்.

பேருந்துகளின் எண்ணிக்கைக்கேற்ப, போக்குவரத்துக் கழகங்களின் பணி மனைகளின் எண்ணிக்கையையும் உயர்த்தும் நோக்கில், சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் பெசன்ட் நகரில் 69 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் ஆதம்பாக்கத்தில் 86 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும்;விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் நெய்வேலியில் 58 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் ஓரிக்கையில் 94 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும்; என 5 கோடியே 57 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஏழு புதிய பணிமனைகளையும் முதல்வர் இன்று திறந்து வைத்தார்.

தமிழக முதல்வர் இன்று போக்குவரத்துத் துறை சார்பில் துவக்கி வைக்கப்பட்ட பேருந்துகள் மற்றும் திறந்து வைக்கப்பட்ட கட்டடங்களின் மொத்த மதிப்பு 56 கோடியே 75 லட்சம் ரூபாய் ஆகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x