Published : 06 Mar 2014 05:24 PM
Last Updated : 06 Mar 2014 05:24 PM

ஃபேஸ்புக், ட்விட்டருக்கு புகழாரம்: மார்க், டார்சிக்கு கருணாநிதி வாழ்த்து

முகநூல் மற்றும் ட்விட்டரால் சாதி, மதம் கடந்த செய்தித் தொடர்பு கள் ஏற்பட்டுள்ளன என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள் ளார்.

திமுக தலைவர் கருணாநிதியின் முகநூல் பக்கத்தில், வியாழக் கிழமை பிற்பகல் வரை ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 428 பேர் விருப் பம் தெரிவித்திருந்தனர். 9,212 பேர் அவரது பக்கத்தை பற்றி விவாதித்துக் கொண்டிருந்தார்கள். இதேபோல், கருணாநிதியின் ட்விட்டர் பக்கத்தில் 26,000 பேர் பாலோயர்களாக உள்ளனர். அவர் இதுவரை சுமார் 2,000 ட்வீட்களைப் பதிவு செய்துள்ளார்.

இந்நிலையில் ட்விட்டர் மற்றும் முகநூல் குறித்து, கருணாநிதி வெளி யிட்ட அறிக்கை வருமாறு:

இந்த நூற்றாண்டின் இணையற்ற கண்டுபிடிப்பு இணைய உலகம். உலகின் எந்த மூலையில் இருப்ப வர்களும் கருத்துலகில் ஒன்றாகி, முகநூல் (FaceBook), ட்விட்டர் (Twitter) ஆகியவற்றில் குடியிருக் கிறார்கள்.

முகநூல் பிப்ரவரி 2004ல் தொடங்கப்பட்டிருக்கிறது. ஹார் வர்டு பல்கலைக்கழக மாணவர் மார்க் ஜுக்கர்பெர்க் என்பவர் உருவாக்கி இருக்கிறார். தனது அறை நண்பர்கள் மற்றும் உடன் படிப்பவர்களுடன் சேர்ந்து இதை உருவாக்கி இருக்கிறார்.

மாணவர்களுக்காக மாணவர் கள் உருவாக்கிய முகநூல் இன்று வீடு, அலுவலகம், நண்பர்கள், உறவினர்கள், கல்வியாளர்கள், அரசியல்வாதிகள், அறிஞர்கள் என்று உலகம் முழுவதும் கோடிக் கணக்கான மக்களின் பயன்பாட்டில் இருக்கிறது. 13 வயதுக்கு மேற் பட்டவர்கள் இதில் கணக்கு தொடங்க முடிகிறது. வங்கிகளில் கூட கணக்கு இல்லாமல் இருக்க லாம் ஆனால், முகநூலில் கணக்கு இல்லை என்றால் முகம் வாடிப் போகிறது.

அதேபோல் ட்விட்டர். 140 எழுத்து களில் உள்ளத்தில் உள்ளதை உடனுக்குடன் வெளிப்படுத்த 50 கோடி மக்கள் இப்போது ட்விட் டரில் இருக்கிறார்கள்.

நியூயார்க் பல்கலையில் மாண வராக இருந்த ஜாக் டார்சி மார்ச் என்பவர் 2006ஆம் ஆண்டில், இரவு 9.50 மணிக்கு ட்விட்டர் செய்தியை அனுப்பியிருக்கிறார். ட்விட்டர் எனும் பெயர் ஒரு பறவையின் கீச்சொலியின் ஒலிபெயர்ப்பாம். முகநூல், ட்விட்டர் வரும்வரை, செய்தித் தொடர்பு ஒருவழிப் பாதை யாகத்தான் இருந்தது. பதிலுக்குக் காத்திருக்க வேண்டியிருந்தது.

முகநூலும், ட்விட்டரும் செய்தித் தொடர்பை இருவழிப்பாதையாக்கி சாதி, மதம், நாடுகளின் எல்லை களைக் கடந்து மக்கள் உறவாட வும், உரையாடவும் வழியமைத் திருக்கின்றன. எல்லாவற்றிற்கும் மேலாக ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற கணியன் பூங்குன்ற னாரின் கனவுலகம் மெய்ப்பட்டி ருக்கிறது. எனவே முகநூல் மற்றும் ட்விட்டர் துவங்கிய மார்க் மற்றும் டார்சிக்கு என் வாழ்த்து களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x