காஷ்மீர் பனிச்சரிவில் மரணமடைந்த தமிழக வீரர் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் நிதியுதவி: ஓபிஎஸ்

காஷ்மீர் பனிச்சரிவில் மரணமடைந்த தமிழக வீரர் குடும்பத்துக்கு  ரூ.20 லட்சம் நிதியுதவி: ஓபிஎஸ்
Updated on
1 min read

காஷ்மீர் பனிச்சரிவில் சிக்கி மரணமடைந்த தமிழக வீரர் தாமோதர கண்ணனுக்கு ரூ. 20 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில், "காஷ்மீர் மாநிலம், குப்வாரா பகுதியில் இந்திய நாட்டின் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டிருந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த ராணுவ வீரர்,மதுரை மாவட்டம், திருமங்கலம் வட்டம், கே.வெள்ளாங்குளம் கிராமம்,தாமோதர கண்ணன் என்பவர் 28.1.2017அன்று ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி, மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி 30.1.2017 அன்று உயிரிழந்தார்.

இந்த செய்தியை அறிந்து நான் மிகுந்த துயரமும், மன வேதனையும்அடைந்தேன்.

இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த ராணுவ வீரர் தாமோதர கண்ணன் அவர்களை இழந்து வாடும்அவரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த ராணுவ வீரர் தாமோதர கண்ணன் அவர்களின் குடும்பத்திற்கு இருபது லட்சம் ரூபாய் உடனடியாக வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்" எனத் தெரிவித்துள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in