

திருநெல்வேலி மாவட்டம், கூந்தன்குளம் அருகே உள்ள ஆயன்குளம் கிராமத்தில் உள்ள பனைத் தொழிலாளர்கள் நேற்று காலையில் நுங்கு வெட்டச் சென்றனர். அங்கு கரடி ஒன்று நிற்பதைப் பார்த்து அவர்கள் கூச்சலிட்டதும் கரடி ஓடிவிட்டது. தகவல் அறிந்த வனத்துறை ஊழியர்கள் 10 வலைகளுடன் அங்கு சென்று கரடி மறைந்திருந்த இடத்தை கண்டுபிடித்தனர்.
திருநெல்வேலியில் இருந்து கால்நடை மருத்துவர் முத்துகிருஷ் ணன் அங்கு வரவழைக்கப்பட்டார். துப்பாக்கி மூலம் அவர் மயக்க ஊசியை செலுத்தும் முயற்சியில் ஈடுபட்டபோது, கரடி அவரை தாக்கிவிட்டு தப்பி ஓடியது.
ஊர் மக்கள் திரண்டு கரடியை விரட்டியதால், அது அருகில் உள்ள அரசனார்குளம் கிராமப் பகுதிக்குள் நுழைந்தது. பின்னர், காந்திநகர் வழியாக சென்ற கரடி, அங்கு இருந்த செல்வமணி(70), அதே பகுதியைச் சேர்ந்த அனந்தகுமார்(28) ஆகி யோரை தாக்கியது. பின்னர், நெல்லையப்பபுரம், தெய்வநாய கபேரி கிராமங்களுக்குள் புகுந்தது. வழியில் அ.சாத்தான்குளத்தைச் சேர்ந்த வி.காளிமுத்து(31), வேட் டைத்தடுப்பு காவலர் பூல்பாண்டி ஆகியோரையும் தாக்கியது. தாக்கு தலுக்கு உள்ளான 5 பேரும் லேசான காயம் அடைந்தனர்.
தெற்கு நெல்லையப்பபுரத்தில் உள்ள ஒரு தோட்டத்துக்குள் புகுந்த கரடியை பிடிக்க வனத்துறையினர் முயற்சி மேற்கொண்டனர். ஆனா லும், அது தோல்வியில் முடிந்தது.