தமிழகத்தின் 19 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

தமிழகத்தின் 19 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
Updated on
1 min read

வெப்பச்சலனம் மற்றும் தென் மேற்கு பருவமழை காரணமாக வேலூர், திருவண்ணாமலை, சேலம், ஈரோடு, திருச்சி உட்பட 19 மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

வெப்பச்சலனம் மற்றும் தென்மேற்கு பருவமழை காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச் சேரியில் அடுத்த 24 மணிநேரத்தில் ஒருசில இடங்களில் மழையோ அல்லது இடியுடன்கூடிய மழையோ பெய்யக்கூடும். தமிழகத்தின் உள்மாவட்டங்களில் அதாவது, வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், நீலகிரி, திருப்பூர், கோயம்புத்தூர், ஈரோடு, கரூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, விருதுநகர், தேனி, திண்டுக்கல், மதுரை ஆகிய 19 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும்.

சென்னை மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் வானம் மேகமூட்டத் துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரத்தில் மழை அல்லது இடியுடன்கூடிய மழை பெய்யும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சேலம் மாவட்டம் ஓமலூரில் 100 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. பாடலூர், ஆரணியில் தலா 90 மில்லி மீட்டர், பேணுகொண்டாபுரம், சூளகிரி, வாணியம்பாடியில் தலா 80 மில்லி மீட்டர், ராயக்கோட்டை, பாலக்கோடு, போளூர், கிருஷ்ணகிரியில் தலா 70 மில்லி மீட்டர், குடியாத்தம், அரூர், காட்டுமன்னார் கோவில், செய்யாறு, மேட்டூர், ஏற்காடு, ஊத்தங்கரையில் 60 மில்லி மீட்டர் மழை பதிவாகி யுள்ளது.

அஞ்சட்டி, செட்டிகுளம், பையூர், காஞ்சிபுரத்தில் தலா 50 மில்லி மீட்டர், ஓசூர், ஸ்ரீபெரும்புதூர், தோகமலை, மேலஆத்தூர், காவேரிப்பாக்கம், போச்சம்பள்ளி, வேலூரில் தலா 40 மில்லி மீட்டர், முசிறி, திருவாரூர், மாயனூர், திருவாலங்காடு, தருமபுரி, தேன்கனிக்கோட்டை, திருப்பத்தூர், கோபிசெட்டிப் பாளையம், ஆலங்காயம், திருப்பத்தூர், துறையூர், சேலம், குழித்தலை, ஆண்டிபட்டி ஆகிய இடங்களில் தலா 30 மில்லி மீட்டர் மழை பதிவாகியிருக்கிறது.

நடுவட்டம், பெரம்பலூர், ஆம்பூர், ஒகேனக்கல், மாரண்ட ஹள்ளி உள்பட 23 இடங்களில் தலா 20 மில்லி மீட்டரும், மங்களாபுரம், சேந்தமங்கலம், செங்குன்றம், பவானி, சோழவந்தான் உட்பட 23 இடங்களில் தலா 10 மில்லி மீட்டரும் மழை பதிவாகியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in