நினைவகங்கள், மணி மண்டபங்களை 360 டிகிரி கோணத்தில் காண இணையதளத்தில் புது வசதி

நினைவகங்கள், மணி மண்டபங்களை 360 டிகிரி கோணத்தில் காண இணையதளத்தில் புது வசதி
Updated on
1 min read

சென்னையில் அண்ணா, எம்ஜிஆர் நினைவிடம் மற்றும் அருங்காட்சியகம், பக்தவச்சலம் நினைவிடம், காந்தி மண்ட பம், ராஜாஜி நினைவாலயம், பாரதியார், காமராஜர் நினைவு இல்லங்கள், மொழிப் போர் தியாகிகள், இரட்டை மலை சீனி வாசன், காயிதேமில்லத், சிங்கார வேலர், ஜீவரத்தினம் மணிமண்டபங்கள், ராஜாஜி மண்டபம், கலைவாணர் அரங் கம் மற்றும் வள்ளுவர் கோட்டம் ஆகி யவை, 360 டிகிரி கோணத்தில், நவீன முறையில் படம் எடுக்கப்பட்டு, ‘www.tndipr.gov.in’ என்ற இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது.

இந்த இணையதளத்தில் நினைவகங் கள், அவற்றில் உள்ள சிறப்புகளை நேரடியாக பார்ப்பது போன்ற உணர்வு ஏற்படும். தேசிய தலைவர்கள் வாழ்க்கை வரலாற்றுக் குறிப்புகள், நினைவகங் களைப் பற்றிய விவரங்கள் உள்ளிட் டவை இதில் இடம் பெற்றுள்ளன. மேலும், யூடியூப் மூலம் நினைவகங்களைக் காண வும் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

இத்தகவல்களை, செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை தெரிவித் துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in