பழைய ரூ.500,1000 நோட்டுகள் ரிசர்வ் வங்கியில் இனி மாற்ற முடியாது: அதிகாரிகள் தகவல்

பழைய ரூ.500,1000 நோட்டுகள் ரிசர்வ் வங்கியில் இனி மாற்ற முடியாது: அதிகாரிகள் தகவல்
Updated on
1 min read

பழைய ரூ.500, 1,000 நோட்டுகளை வௌிநாடு வாழ் இந்தியர்களை தவிர பொதுமக்கள் இனி ரிசர்வ் வங்கியில் மாற்ற முடியாது என அவ் வங்கி அதிகாரிகள் தெரிவித் துள்ளனர்.

கறுப்புப் பணத்தை ஒழிப் பதற்காக மத்திய அரசு 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என கடந்த நவம்பர் 8-ம் தேதி அறிவித்தது. இதையடுத்து பழைய ரூபாய் நோட்டுகளை பொதுமக்கள் டிசம்பர் 30-ம் தேதி வரை வங்கிகளில் மாற்றிக் கொள்ளலாம் என்றும் அதன் பிறகு ரிசர்வ் வங்கியில் மாற்றிக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், வங்கிகளில் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கான காலக்கெடு முடிவடைந்ததையடுத்து பொது மக்கள் தங்களிடம் உள்ள பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற் காக நேற்றுமுன்தினம் ரிசர்வ் வங்கிக்கு வந்தனர். ஆனால், அன் றைய தினம் அவர்களுக்கு பழைய ரூபாய் நோட்டுகள் மாற்றித் தரப்படவில்லை. இதையடுத்து, அவர்கள் முற்றுகைப் போராட்டத் தில் ஈடுபட்டனர். இந்நிலையில், 2-வது நாளாக நேற்றும் அவர்கள் ரிசர்வ் வங்கிக்கு வந்தனர். நேற்றும் அவர்களுக்கு பழைய ரூபாய் நோட்டுகள் மாற்றித் தரப்படவில்லை.

இதுகுறித்து, அவர்கள் கூறிய தாவது:

பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை டிசம்பர் 30-ம் தேதிக்குப் பிறகு ஜனவரி 1-ம் தேதி முதல் மார்ச் 31-ம் தேதி ரிசர்வ் வங்கியில் சென்று மாற்றிக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, நாங்கள் கடந்த 2 நாட்களாக பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற ரிசர்வ் வங்கிக்கு வரு கிறோம். ஆனால், வங்கி அதிகாரிகள் அவற்றை மாற்றித் தர மறுக்கின்றனர். இதனால் நாங்கள் தினமும் வந்து ஏமாந்து செல்லும் நிலை உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதுகுறித்து, ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் கேட்டபோது, மத்திய அரசு அண்மையில் பிறப்பித்த அவசர சட்டத்தின்படி இனிமேல் ரிசர்வ் வங்கிகளில் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மாற்ற முடியாது. வௌிநாடு வாழ் இந்தியர்களுக்கு பழைய ரூபாய் நோட்டுகள் மாற்றித் தரப்படுகிறது.

அதேபோல் நவம்பர் 8-ம் தேதிக்குப் பிறகு வெளி நாடுகளுக்குச் சென்று திரும்பி வந்தவர்கள் மட்டும்தான் தங் களிடம் உள்ள பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்ற முடியும்’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in