

மாநில மனித உரிமைகள் ஆணையம் நேற்று பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: ‘தி இந்து’ ஆங்கில நாளிதழில் ராம்குமார் மரணம் குறித்து நேற்று வெளியான செய் தியை அடிப்படையாகக் கொண்டு தானாக முன் வந்து இந்த வழக்கை ஆணையம் விசாரணைக்கு எடுத்துக்கொள்கிறது. மேலும், ராம்குமார் மரணம் குறித்து மூத்த அதிகாரியைக் கொண்டு விசாரணை நடத்தி விரிவான அறிக்கையை ஏடிஜிபி (புலனாய்வு பிரிவு) 2 வாரத்தில் தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.