டென்சிங் நார்கே தேசிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட தமிழக ஸ்கை டைவிங் வீரருக்கு ஜெ. வாழ்த்து

டென்சிங் நார்கே தேசிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட தமிழக ஸ்கை டைவிங் வீரருக்கு ஜெ. வாழ்த்து
Updated on
1 min read

ஸ்கை டைவிங் வீரர் ராஜ்குமாருக்கு முதல்வர் ஜெயலலிதா நேற்று அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தி:

தமிழக அரசின் பரிந்துரையின் பேரில் மத்திய அரசின் 2015-ம் ஆண்டுக்கான டென்சிங் நார்கே தேசிய சாகச விருதுக்கு நீங்கள் தேர்வுசெய்யப்பட்டிருப்பதை அறிந்து மிகவும் மகிழ்ச்சி அடை கிறேன். இந்த விருது, ஸ்கை டைவிங் வீரரான நீங்கள் செய்த சாதனைகளுக்கு கிடைத்த அங்கீ காரம் ஆகும். உங்களையும் உங் கள் வெற்றிக்குப் பாடுபட்டவர் களையும் வாழ்த்துகிறேன். எதிர் காலத்தில் இன்னும் உயர்வான லட்சியங்களை அடைவதற்கு இந்த விருது உங்களுக்கு ஊக்கமளிக்கும் என்றும், வரும் காலத்தில் தமிழ்நாட்டுக்கும் இந்தியாவுக்கும் மேலும் புகழ் சேர்ப்பீர்கள் என்றும் நான் நம்புகிறேன் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in