

விவசாயிகளைப் பாதுகாக்க எடுக் கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து தமிழக அரசு 4 வாரத்தில் பதில் மனு தாக்கல் செய்யுமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பொதுநல வழக்குகளுக்கான தமிழக மையத்தின் நிர்வாக அறங்காவலராக இருப்பவர் மதுரை கே.கே.ரமேஷ். இவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் சமீபகாலமாக விவசாயிகள் தற்கொலை குறித்த செய்திகள் அதிகம் வருகின்றன. கடந்த 3 ஆண்டுகளாக வட கிழக்கு, தென்மேற்கு பருவ மழை பொய்த்துவிட்டதால் விவ சாயிகள் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளனர். விவசாயத்துக்காக வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியவில்லை. இதனால் தற்கொலை செய்து கொள்கின்றனர்.
குறிப்பாக டெல்டா மாவட்டங் களில் தற்கொலைகள் அதிகம் நடந்துள்ளன. கடந்த 2 மாதத் தில் மட்டும் 13 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். இதில் 7 பேர் திருவாரூர், நாகப் பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந் தவர்கள். விவசாயத்தில் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்த தவறுவதும் இதற்கு காரணம். தண்ணீ்ர் பற்றாக்குறையால் பயிர்கள் கருகியுள்ளன. விவசாயி களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படவில்லை.
இஸ்ரேல், ஜப்பான்
விவசாயத்துக்கு லாயக்கற்ற இஸ்ரேல், உணவு உற்பத்தியில் உலகிலேயே முன்னிலை வகிக் கிறது. அங்கு 50 சதவீதம் பாலை வனம். 20 சதவீத நிலத்தில்தான் விவசாயம் நடக்கிறது. ஆனால் 95 சதவீத உணவு உற்பத்தி அங்கு உள்நாட்டில்தான் நடக்கிறது.
1948-ல் இஸ்ரேல் சுதந்திரம் அடைந்தபோது, அங்கு 4.08 லட்சம் ஏக்கர் விவசாய நிலம் மட்டுமே இருந்தது. தற்போது 10.70 லட்சம் ஏக்கராக அதிகரித்துள்ளது. எரிமலை ஆராய்ச்சி மையம் உள்ள காஸாவில் விவசாயி களுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. ஜப்பானிலும் நவீன முறையில் விவசாயம் செய்யப்படுகிறது. ஆனால், இந்தியாவில் விவசாயம் பின் னோக்கிச் செல்கிறது.
எனவே, பாதிக்கப்பட்ட விவ சாய குடும்பங்களைக் கண் டறிந்து நிவாரணம் வழங்க வேண்டும். விவசாயிகள் தற் கொலையைத் தடுக்க மாவட்டந் தோறும் நிபுணர் குழு அமைக்க வேண்டும். பருவமழை தவறி னால் பயிர்களைக் காக்க நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும். நவீன தொழில்நுட்பம் குறித்து விவசாயிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். வறட்சியை சமாளிக்க சொட்டுநீர் பாசனத்தை அரசு ஊக்குவிக்க வேண்டும். இது தொடர்பாக நான் ஏற்கெனவே அரசுக்கு அனுப்பிய மனுவை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு மீதான விசாரணை நேற்று தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி எம்.சுந்தர் அடங்கிய முதல் அமர்வில் நடந்தது. விவசாயிகளைப் பாது காக்க எடுக்கப்பட்டுள்ள நட வடிக்கைகள் குறித்து தமிழக அரசு 4 வாரத்தில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை பிப்ரவரி 14-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.