Published : 08 Feb 2017 08:26 AM
Last Updated : 08 Feb 2017 08:26 AM

மனோன்மணியம் சுந்தரனார் கட்டிய ‘ஹார்வே’ மாளிகை: வாரிசுகளிடம் ஒப்படைக்க கேரள மாநில தமிழ் பாதுகாப்பு இயக்கம் கோரிக்கை

மனோன்மணியம் சுந்தரனார் வாழ்ந்த ‘ஹார்வே’ மாளிகையையும் அவருக்காக திருவிதாங்கூர் ராஜா வழங்கிய 90 ஏக்கர் நிலத்தையும் வறுமையில் இருக்கும் அவரது வாரிசுகளிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என கேரள மாநில தமிழ் பாதுகாப்பு இயக்கம் கோரிக்கை வைத்திருக்கிறது.

‘நீராரும் கடலுடுத்த..’ என்ற தமிழ்த்தாய் வாழ்த்தை தமிழுக்குத் தந்தவர் மனோன்மணியம் சுந்தர னார். திருவனந்தபுரத்தில் பிறந்த தமிழரான சுந்தரனார் திருவனந்த புரம் மகாராஜா கல்லூரியில் (இப் போது கேரள பல்கலைக்கழகம்) முதுகலை தத்துவம் படித்து அங்கேயே பேராசியராகவும் பணி யாற்றியவர், திருவிதாங்கூர் சமஸ் தானத்தின் அரசவைப் பேராசிரி யராகவும் இருந்தார்.

இந்த பெருமையை பாராட்டும் விதமாக 1892-ல் திருவனந்தபுரம் பேரூர்கடை பகுதியில் 90 ஏக்கர் நிலத்தை சுந்தரனாருக்கு தானமாக வழங்கியது திருவிதாங்கூர் சமஸ் தானம். அவ்விடத்தில் மாளிகை ஒன்றை கட்டிய சுந்தரனார், அதற்கு ஸ்காட்லாந்தைச் சேர்ந்த தனது பேராசிரியர் ‘ஹார்வே’யின் பெயரை சூட்டி அங்கே தனது சைவ, இலக்கியப் பணிகளை தொடர்ந்தார்.

தனது 42 வயதில் (1897) சுந்தர னார் இயற்கை எய்தினார். அவ ருக்கு ஒரே ஒரு மகன் பி.எஸ்.நடராஜ பிள்ளை. 1916-ல் திருவிதாங் கூர் சமஸ்தானத்தின் கெடுபிடிகளை கண்டித்து நடராஜ பிள்ளை போராட்டங்களை முன்னெடுத்தார். இவரை ஒடுக்க நினைத்த திருவிதாங் கூர் சமஸ்தான திவான் சி.பி.ராமசாமி ஐயர் மனோன்மணியம் சுந்தரனாருக்காக சமஸ்தானம் வழங்கிய 90 ஏக்கர் நிலத்தையும் அதிலிருந்த ‘ஹார்வே’ மாளிகையை யும் மீண்டும் சமஸ்தான சொத் தாக்கினார். இதைத்தான் மீண்டும் சுந்தரனாரின் வாரிசுகளிடம் ஒப் படைக்கக் கோருகிறது கேரள மாநில தமிழ் பாதுகாப்பு இயக்கம்.

இதுகுறித்து ‘தி இந்து’விடம் பேசிய அந்த இயக்கத்தின் பொதுச் செயலாளர் பேராசிரியர் வித்துவான் மா.பேச்சிமுத்து, “திருவிதாங்கூர் சமஸ்தானம் ‘ஹார்வே’ மாளி கையை கையகப்படுத்திய பிறகு சுதந்திர இந்தியாவில் அமைந்த கேரள காங்கிரஸ் அமைச்சரவை யில் 6 முறை எம்எல்ஏ-வாகவும் அதில் 2 முறை அமைச்சராகவும் இருந்த நடராஜ பிள்ளை 1964-ல் திருவனந்தபுரம் எம்பி-யாகவும் இருந்தார்.

அவரது மறைவுக்குப் பிறகு அவரது வாரிசுகள் 1968-ல் முதல்வர் நம்பூதிரிபாட்டிடம் அந்த மாளி கையை கேட்டு கோரிக்கை வைத்த னர். அதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்ட நிலையில் அடுத்து வந்த அரசு, மாளிகை சம்பந்தப் பட்ட நிலத்தை தனியார் சட்டக் கல்லூரிக்கு குத்தகைக்குவிட்டது. கருணாகரன் முதல்வராக இருந்த போது அந்த நிலத்தை தனியார் ஒருவருக்கு பட்டா மாறுதலே செய்துவிட்டார்கள்.

நடராஜ பிள்ளைக்கு 9 மகள்கள், 3 மகன்கள் என மொத்தம் 12 பிள் ளைகள். இவர்களில் பெரும் பாலானவர்களுக்கு சொந்த வீடுகூட இல்லை. அதனால்தான், ‘ஹார்வே’ மாளிகையை மனோன்மணியம் சுந்தரனாரின் வாரிசுகளிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என கேரள முதல்வருக்கு கோரிக்கை மனு அனுப்பி இருக்கிறோம். உரிய பதில் வராவிட்டால் சுந்தரனாரின் வாரிசுகளை ஒன்றுதிரட்டி மார்ச் முதல் வாரத்தில் கேரள தலைமைச் செயலகம் முன்பாக போராட்டம் நடத்துவோம்’’ என்றார்.

நடராஜ பிள்ளையின் பேரனான வரதன், ‘‘நாங்கள் ஹார்வே மாளி கையை கேட்க மாட்டோம். அதற்கு பதிலாக அந்த மாளிகையை தேசிய அளவிலான ஒரு நினைவுச்சின்ன மாக அங்கீகரித்து அதைப் பாதுகாத் துப் போற்றும் நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என்பதே எனது விருப்பம்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x