Published : 17 Jun 2017 09:06 am

Updated : 17 Jun 2017 09:06 am

 

Published : 17 Jun 2017 09:06 AM
Last Updated : 17 Jun 2017 09:06 AM

டெல்லியில் பிரதமரை சந்திப்பது ஏன்?- முதல்வர் கே.பழனிசாமி விளக்கம்

தமிழகத்துக்கான திட்டங்கள், நிதியை பெறுவதற்காகவே நான் டெல்லியில் பிரதமரை சந்திக்கிறேன் என சட்டப்பேரவையில் முதல்வர் கே.பழனிசாமி தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் நேற்று உணவு, கூட்டுறவுத்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடந்தது. இதில் பேசிய மதுராந்தகம் திமுக எம்எல்ஏ புகழேந்தி, ‘‘மதுராந் தகம் ஏரியை தூர்வார வேண்டும். பாலாற்றின் குறுக்கில் எங்கள் பகுதி யில் தடுப்பணை கட்ட வேண்டும். மாமண்டூர்- தொழுதூர் இடையில் விபத்து அதிகம் நடப்பதால், மேம் பாலங்கள் கட்டித்தர வேண்டும் என கேட்டிருந்தேன். ஆனால், மத்திய அரசுதான் செய்ய வேண்டும் என அப்போது நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக இருந்த முதல்வர் தெரிவித்திருந்தார். தற்போது பலமுறை டெல்லி சென்று பிரதமரை அவர் சந்திக்கிறார். பிரதமருடன் இணக்கமாக இருக்கும் நிலையில், இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.


இதற்கு பதிலளித்து முதல்வர் கே.பழனிசாமி பேசியதாவது:

மதுராந்தகம் ஏரி தூர்வாரும் பணி யில் அரசு வருவாய் ஈட்டும் வகையில் ஆய்வு மேற்கொள்ளப்படும். பாலாற்றின் குறுக்கில் தடுப்பணை கட்டுவதும் ஆய்வு செய்யப்படும். பிரதமரை நான் சந்திப்பது உண்மை தான். தமிழகத்தில் இருக்கும் பிரச் சினைகளை எடுத்துக் கூறி, நமக் குத் தேவையான திட்டங்கள், நிதியாதாரங்களை பெறுவதற்கா கவே செல்கிறேன். முன்னதாக தரை வழி போக்குவரத்துத் துறை அமைச் சராக டி.ஆர்.பாலு இருந்த காலத்தில் பணிகளை முடித்திருந்தால் விபத்து களை தவிர்த்திருக்கலாம். இன்று மத்தியில் ஆளும் கட்சியில் நாங்கள் இல்லை. தமிழகத்தில்தான் நாங்கள் ஆளுகிறோம். மத்திய அரசு கோரிக்கையை நிறைவேற்றினால் திட்டம் நிறைவேறும்.

இவ்வாறு முதல்வர் பதில் அளித்தார்.


டெல்லிபிரதமரை சந்திப்பது ஏன்முதல்வர்கே.பழனிசாமிவிளக்கம்

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x