கவிஞர் தமிழ்நாடன் மறைவு

கவிஞர் தமிழ்நாடன் மறைவு
Updated on
1 min read

சேலத்தைச் சேர்ந்த தமிழ் கவிஞரும், சாகித்ய அகாடமி விருது பெற்றவருமான தமிழ்நாடன் உடல் நலக்குறைவால் சனிக்கிழமை காலமானார். அவருக்கு வயது 72.

சேலம், தாதகாப்பட்டியில் வசித்து வந்தார். ஏர்வாடியில் சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்த இவர், 13 வயது முதல் கவிதை எழுதத் துவங்கினார்.

37 ஆண்டுகளுக்கு மேலாக, கவிதை, கட்டுரை, நாவல்களை எழுதித் தனக்கெனத் தனி முத்திரை பதித்துள்ளார். ஐந்து தொகை நூல், இரண்டு நாவல், எட்டு புத்தகம், பரம்பரை வரலாறு தொகுக்கப்பட்ட ஒரு நாடகம், மேலும் பல கவிதைகளையும் எழுதியுள்ளார். ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in