மோடி நினைத்தால் ராஜபக்ச அரசை அகற்றலாம்: ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

மோடி நினைத்தால் ராஜபக்ச அரசை அகற்றலாம்: ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்
Updated on
1 min read

பிரதமர் நரேந்திர மோடி நினைத்தால் இலங்கையில் ராஜபக்ச அரசை அகற்றி ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

சென்னையில், தமிழக காங்கிரஸ் தலைமையகம் சத்தியமூர்த்தி பவனில், காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் பேசியதாவது:

"இலங்கையில் ராஜபக்ச தலைமையிலான ஆட்சியை அகற்றிவிட்டு தமிழர் நலனில் அக்கறை கொண்ட ஆட்சியை அமைக்க பிரதமர் நரேந்திர மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்கள் விரோத ஆட்சியை நீக்கும் கடமை இந்தியா போன்ற வல்லரசுக்கு இருக்கிறது. ராஜபக்ச அரசை அகற்றுவது எப்படி என்று மோடிக்கு நிச்சயமாக தெரியும். ராஜபக்ச அரசை அகற்றுவது எப்படி என்பது எனக்கு தெரியாது. அது மோடிக்கு தெரியும். மோடிக்கும் தெரியாவிட்டால் அவர் அமெரிக்காவின் உதவியைப் பெற்றுக் கொள்ளலாம்.

தமிழக மீனவர்கள் 5 பேருக்கு இலங்கை நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்ததன் பின்னணியில் இருப்பவர் அந்நாட்டு அதிபர் ராஜபக்சவே. இலங்கையில் ஜனநாயகம் அழிந்துவிட்டது.

இத்தகைய சூழலில் அங்கு தமிழர் ஆதரவு அரசு அமைய வேண்டும். அதற்கு, இலங்கையில் ராஜபக்ச அரசை அகற்ற பிரதமர் நரேந்திர மோடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" இவ்வாறு ஈ.வி.கே.எஸ். தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in