தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்துக்கு மழை நீடிக்கும்

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்துக்கு மழை நீடிக்கும்
Updated on
1 min read

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்துக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

செய்தியாளர்களை சந்தித்த சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் ரமணன் கூறியதாவது, "தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்துக்கு மழை நீடிக்கும்.

தென் தமிழகத்தில் பலத்த மழை பெய்யும். வட தமிழகத்தைப் பொருத்தவரை ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது.

இலங்கை - தென் தமிழகம் இடையே நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு நிலை அங்கேயே நீடிக்கிறது. லட்ச்சத்தீவிலும் புதிய காற்றழுத்த் தாழ்வு நிலை உருவாகியுள்ளது. எனவே தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்துக்கு மழை நீடிக்கும்" இவ்வாறு அவர் தெரிவித்தார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in