

சென்னை புதுக் கல்லூரி மாணவர் பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற திமுக நிர்வாகிகள் அக்கட்சியின் பொருளாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
சென்னை ராயப்பேட்டை புதுக் கல்லூரியில் நடைபெற்ற மாணவர் பேரவைத் தேர்தலில் திமுக மாணவ ரணியைச் சேரந்தவர்கள் வெற்றி பெற்றுள்ளனர், மாணவர் பேரவைத் தலைவராக வணிகவியல் துறை மாணவர் அ.முகம்மது தாஜூதீன், பொதுச்செயலாளராக சமூகவியல் துறை மாணவர் கேசவ் கோர்படே, துணைத் தலைவராக முகம்மது கவுஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரும் ஸ்டாலினை அவரது ஆழ்வார் பேட்டை இல்லத்தில் நேற்று சந்தித் தனர். மாணவர்கள் நலனுக்காக புதிய நிர்வாகிகள் சிறப்பாக செயல் பட அவர் வாழ்த்து தெரிவித்தார்.