

‘தி இந்து’ குழுமம் மற்றும் தன்னார்வ அமைப்புகள் இணைந்து, மயிலாப்பூர் நாகேஸ் வரராவ் பூங்காவில் புயலால் சேதமடைந்த மரங்களை சீர மைக்கும் பணி நாளை (ஜன.7) நடைபெறுகிறது.
‘வார்தா’ புயலால் சென்னை மாநகரம் 1 லட்சத்துக்கும் அதிக மான மரங்களை இழந்துள்ளது. இதனால் சென்னை மாநகர சுற்றுச்சூழல் பெரிய அளவில் பாதிக்க வாய்ப்புள்ளது. அந்த பாதிப்புகளை குறைக்கும் விதமாக ‘தி இந்து’ குழுமம், “பசுமை சென்னை” என்ற கருப்பொருளை உருவாக்கியுள்ளது. அதன் மூலம், நிழல் அமைப்புடன் இணைந்து, ‘தி இந்து’ சென்னை நண்பர்கள் குழு தன்னார்வலர்கள் மூலம், கடந்த இரு வாரங்களாக, வார இறுதி நாட் களில், கோட்டூர்புரத்தில் உள்ள ட்ரீ பார்க்கில் விழுந்த மரங்களை அகற்றியும், உயிர்பெற வாய்ப் புள்ள மரங்களை மீண்டும் நடவு செய்தும், அப்பகுதியில் பசுமை போர்வையை மீட்டெடுக்கும் பணியில் ஈடுபட்டு வந்தது.
அதன் தொடர்ச்சியாக இந்த வாரம், சனிக்கிழமை நிழல் அமைப் புடன் இணைந்து மயிலாப்பூர் நாகேஸ்வரராவ் பூங்காவில் மாலை 4 முதல் 6 மணி வரை மரங்கள் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள உள்ளது.
சிடிசி ஐந்திணை அமைப்புடன் இணைந்து, ஞாயிற்றுக்கிழமை காலை 6.30 மணிக்கு ஆவடி அருகில் உள்ள பாக்கம் பகுதியில் மரக்கன்றுகள் நடப்பட உள்ளன. அன்று மாலை 4 முதல் 6 மணி வரை நிழல் அமைப்புடன் இணைந்து பனகல் பூங்காவில் மரங்களை சீரமைக்கும் பணி நடைபெற உள்ளது.
இந்த முக்கியத்துவம் வாய்ந்த, சென்னையின் பசுமை போர் வையை மீட்டெடுக்கும் பணியில், விருப்பம் உள்ள தன்னார்வலர்கள் மேலே குறிப்பிட்ட இடங்களில், குறிப்பிட்ட நேரத்தில் பங்கேற் கலாம்.